கைலாசு புர்யாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியாதைக்குரிய
கைலாசு புர்யாக்
மொரிசியசின் ஐந்தாவது குடியரசுத் தலைவர்
பதவியில்
21 சூலை 2012 – 29 மே 2015
பிரதமர்நவின்சந்திரா ராம்கூலம்
அனெரூட் ஜக்நாத்
Vice Presidentமோனிக் ஓசான் பெல்லிபியாவ்
முன்னையவர்மோனிக் ஓசான் பெல்லிபியாவ் (பொறுப்பு)
பின்னவர்மோனிக் ஓசான் பெல்லிபியாவ் (பொறுப்பு)
தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர்
பதவியில்
12 சூலை 2005 – 20 சூலை 2012
முன்னையவர்பிரேம் ராம்நாத்
பின்னவர்இரசாக் பீரோ
மொரிசியசின் துணைப் பிரதம்ர்
பதவியில்
22 திசம்பர் 1997 – 17 செப்டம்பர் 2000
பிரதமர்நவின்சந்திரா ராம்கூலம்
முன்னையவர்பால் பெரெஞ்சர்
பின்னவர்பால் பெரெஞ்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராஜகேசுவர் புர்யாக்

12 திசம்பர் 1947 (1947-12-12) (அகவை 76)
பிரித்தானிய மொரிசியசு
அரசியல் கட்சிமொரிசியசு தொழிலாளர் கட்சி
துணைவர்அனீத் புர்யாக் (1973– தற்போது வரை)
பிள்ளைகள்1

இராஜ்கேசுவர் புர்யாக் (Rajkeswur Purryag) (பிறப்பு: 1947 திசம்பர் 12) கைலாசு புர்யாக் என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு முன்னாள் மொரிசியசு அரசியல்வாதி ஆவார். இவர் 2012 முதல் மே 2015 வரை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். [1] [2] மொரிசியசின் தேசிய சட்டமன்றத்தால் ஐந்தாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2012 சூலை 21 அன்று பதவியேற்றார். அனெரூட் ஜக்நாத் 2003 முதல் ஒன்பது ஆண்டுகள் குடியரசுத்தலைவராக இருந்து 2012 மார்ச் மாதம் பதவி விலகிய பின்னர் இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர், முன்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார். இவர் 1976 இல் சிறு வயதிலேயே அரசியல் அரங்கில் அறிமுகமானார். [3] இவரது பெரிய தாத்தா இலட்சுமண் பரியாக் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு மொரிசியசுக்கு ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரிந்தார். [4] [5]

சுயசரிதை[தொகு]

இவர் 1947 திசம்பர் 12 அன்று மொரிசியசிலுள்ள கேம்ப் போக்ரூக்சில் பிறந்தார். இவர் ஒரு பீகாரி மொரிசியனாவார். இவரது மூதாதையர்கள் இந்திய மாநிலமான பீகாரில் இருந்து வந்தவர்கள். [6] இவர் சிறீ சம்புநாத் அரசுப் பள்ளியிலும் பின்னர் மொரிசியசுக் கல்லூரியிலும் பயின்றார். இவர் 1973 இல் வழக்கறிஞராக பதவியேற்றார். அதே ஆண்டு இவர் மொரிசிய தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். இவர் 1984 இல் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1995 இல் தலைவராகவும் ஆனார். [7] [8]

புர்யாக் 2013 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பிரவாசி பாரதிய சம்மானைப் பெறுகிறார்

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-05-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Kailash Purryag becomes the fifth President of the Republic of Mauritius". KotZot. Archived from the original on 23 July 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
  4. "Mauritius President Rajkeswur Purryag finds his ancestral roots in Bihar". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 16 January 2012.
  5. "I'm proud to be a Bihari, says Mauritius president". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-06-18. பார்க்கப்பட்ட நாள் 16 January 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. https://timesofindia.indiatimes.com/india/Im-proud-to-be-a-Bihari-says-Mauritius-president/articleshow/17918798.cms
  7. "Purryag for President" (in பிரெஞ்சு). defimedia. Archived from the original on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
  8. "Dans l'intimité du couple présidentiel – Aneetah Purryag : " Je suis tombée amoureuse de Kailash au premier regard "" (in பிரெஞ்சு). defimedia. Archived from the original on 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசு_புர்யாக்&oldid=3551481" இலிருந்து மீள்விக்கப்பட்டது