மோனிகா தாசு குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோனிகா தாசு குப்தா (Monica Das Gupta) என்பவர் மாந்தவியல், மக்கள் தொகை ஆராய்ச்சியாளர். அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பேராசிரியராகப் பணி செய்கிறார். இந்தியா, சிறீலங்கா, சீனா, தென் கொரியா, வியட்நாம், நைஜீரியா ஆகிய நாடுகளில் பயணம் செய்து மக்கள் தொகைப் பெருக்கம், அதன் விளைவாக ஏற்படும் வறுமை, நோய்கள், பொது சுகாதாரம், சூழ்நிலைத் துப்புரவு ஆகிய தளங்களில் இயங்கியும் ஆங்கில இதழ்களில் எழுதியும் வருகிறார். குடும்ப அமைப்பு முறை, ஆண் பெண் பாலின வேறுபாடுகள், திருமணம், மகப் பேறு ஆகியன பற்றியும் ஆய்வு செய்து வருகிறார். தென்னாப்பிரிக்காவிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் குறைந்த செலவில் பொது சுகாதாரத் திட்டங்களை அமுல் படுத்துவது பற்றி பரப்புரை செய்து வருகிறார். சிறீ லங்கா, சீனா ஆகிய நாடுகளில் நிலவும் பொது சுகாதார நிலைகள் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_தாசு_குப்தா&oldid=3381916" இலிருந்து மீள்விக்கப்பட்டது