மோசின் திண்மை அளவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோசின் அளவுகோல் (Mohs scale of mineral hardness) தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும். இதை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சோ்ந்த ஃபிரடரிக் மோசு ஆவார்.[1]

ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!

கனிமங்களின் கடினத்தன்மை[தொகு]

மோசு வடிவமைத்த கடினத்தன்மை அளவுகோல் ஏறுவரிசையில்:

மோசின் கடினத்தன்மை கனிமம் கடின எண் படிமம்
1 மாக்கல் (talc) (Mg3Si4O10(OH)2) 1 Talc block.jpg
2 ஜிப்சம் (CaSO4·2H2O) 3 Gypse Arignac.jpg
3 கால்சைட்டு (CaCO3) 9 Calcite-sample2.jpg
4 புளூரைட் (CaF2) 21 Fluorite with Iron Pyrite.jpg
5 அப்படைட்டு (Ca5(PO4)3(OH-,Cl-,F-)) 48 Apatite Canada.jpg
6 ஆர்த்தோகிளேசு ஃபெல்ட்ஸ்பார் (KAlSi3O8) 72 OrthoclaseBresil.jpg
7 படிகக்கல் (quartz)(SiO2) 100 Quartz Brésil.jpg
8 புட்பராகம் (topaz)(Al2SiO4(OH-,F-)2) 200 Topaz cut.jpg
9 குருந்தக்கல் (Al2O3) 400 Cut Ruby.jpg
10 வைரம் (C) 1600 Rough diamond.jpg

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 22 Feb. 2009 "Mohs hardness."