மொழிநெறியெழுபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழிநெறியெழுபா என்னும் நூல் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்டது.[1][2] இந்நூல் பரிதி, சிவபெருமான், பராசக்தி, திருமால், கணபதி, முருகப்பெருமான், பொதுக்கடவுள் என முறையே சௌரம், சைவம், சாக்தம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம் என அறுவகைச் சமயங்களுக்கும் சமயாதீதமாகிய பொது நிலைக் கடவுளுக்கும் என எழுநிலையில் தெய்வங்களைப் பரவும் வண்ணம் ஏழு அகவற் பாக்களில் அமைந்த நூலாகும். சமய பேதங்களை விடுத்து ஒன்றாக நோக்கும் தன்மை சுவாமிகளின் நூல்கள் பலவற்றுள் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. தண்டபாணி சுவாமிகள் (திசம்பர் 2020). மொழிநெறியெழுபா. கோ.முரளிதரன். 
  2. http://www.tamilvu.org/ta/tdb-tdbindex-tdbindex-1-340481
  3. "https://vannacharabam.in/assets/documents/books/mozhi.pdf". {{cite web}}: External link in |title= (help); Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழிநெறியெழுபா&oldid=3799881" இலிருந்து மீள்விக்கப்பட்டது