உள்ளடக்கத்துக்குச் செல்

மேகமலை பாறைப்பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகமலை பாறைப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
ஜிகோட்டா
குடும்பம்:
பேரினம்:
கெமிடாக்டைலசு
இனம்:
கெ. வனம்
இருசொற் பெயரீடு
கெமிடாக்டைலசு வனம்
சைத்தன்யா, லாஜ்மி & கிரி, 2018[1]

மேகமலை பாறைப்பல்லி (கெமிடாக்டைலசு வனம்) என்பது தரைப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாட்டில் மேகமலையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது பெரிய அளவிலான கெமிடாக்டைலசு சிற்றினமாகும். இது அதிகபட்சமாக 112.2 மி.மீ. வரை வளரக்கூடியது.

வாழ்விடம்:

[தொகு]

மேகமலைப் பாறைப்பல்லி பாறைகளைச் சுற்றியுள்ள மரங்களின் உயரமான கிளைகளில் எப்போதாவது காணப்படும். பகலில் பாறை பிளவுகளில் வாழும். இது தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிகளில் காணப்படுகிறது. வனப்பகுதிகளில் காணப்படுவதால், வனம் எனும் சிற்றினப் பெயரினைப் பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. CHAITANYA, R.; APARNA LAJMI, VARAD B. GIRI 2018. A new cryptic, rupicolous species of Hemidactylus Oken, 1817 (Squamata: Gekkonidae) from Meghamalai, Tamil Nadu, India. Zootaxa 4374 (1): 49-70
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகமலை_பாறைப்பல்லி&oldid=3820688" இலிருந்து மீள்விக்கப்பட்டது