மேகத்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகத்பூர்
நகரம் 
நாடு  இந்தியா
மாநிலம் பஞ்சாப் 
மாவட்டம் ஜலந்தர் 
மக்கள்தொகை
 • மொத்தம்தோராயமாக 15,000
Languages
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN144041 [1]
தொலைபேசிக் குறியீடு01821
வாகனப் பதிவுPB- 33
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
காலநிலைவெப்பல் (கோப்பென்)

மேகத்பூர் (Mehatpur) பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்நகரம் நாகோதரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 71 (NH-71) இல் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

நிலவியல்[தொகு]

மேகத்பூர் நகரம் குளிர்காலம் மற்றும் சூடான கோடைகாலங்களுடன் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல சூழலை கொண்டுள்ளது. கோடைகாலம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் குளிர்காலமாகும். கோடை காலத்தில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரும் . இந்நகரில் சராசரியாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகும். குளிர்கால வெப்பநிலை 19 ° C முதல் 2 ° C வரை குறையலாம். சராசரியான ஆண்டு மழை 60 செ.மீ ஆக உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

மேகத்பூரில் பல மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. சிவில் மருத்துவமனை, சண்டி மருத்துவமனை, சேமா மருத்துவமனை, தியாபா மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை ஆகியவைகள் குறிபிடத்தக்கவை. மேலும் அரிசி ஆலைகள், காகிதம், மின் ஆலை, மெஹபூர் ஆகியவை சர்க்கரை ஆலை என பல தொழில் செய்யும் நிறுவனங்களும் உள்ளன.

கல்வியறிவு [தொகு]

இந்த நகரம் பன்னிரெண்டு ஆங்கில மற்றும் பஞ்சாபி பள்ளிகளை (சிபிஎஸ்இ மற்றும் பிஎஸ்ஈபி இணைக்கப்பட்டுள்ளது) கொண்டிருக்கிறது. மேலும், அருகிலுள்ள கிராமங்களுக்கான மாணவர்களுக்கு பள்ளிப் பேருந்துகளும் இயக்கபடுகின்றன.

மொழி [தொகு]

பெரும்பாலான மக்கள் பேசும் மொழி பஞ்சாபி ஆகும். மேகத்பூரின் அதிகாரப்பூர்வ மொழி பஞ்சாபியாக உள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற புதிய மொழிகளோடு பல்வேறு கலாச்சாரங்களை சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்து நகரத்தைச் செழிப்பாக்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் சீக்கிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வரலாற்று மற்றும் சமயத் தலங்கள்[தொகு]

பாபா ராம் மாலொ ஜி, சாந்த்-சதர், குருத்வாரா - சிங் சபா, ஹால்டி சாஹிப், பெர் சாஹிப், ராம்கிரிய மந்திர், குருடாவாரா சம்ரா பட்டி, ஷிவ் மந்திர், தியானா மந்திர், டேரா கரிப் டாசி தம், பாபா ஜஹர் பிர் அருகில் துங்கர பட்டி, குருத்வாரா ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி தங்காண பட்டி ஆகியவை குறிப்பிடத்தக்க வழிபாட்டுத் தலங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மேகத்பூரில் நடைபெறும் சின்ஜ் என்ற மல்யுத்த போட்டி, தசரா பண்டிகை (இந்து மதத்தின் ஒரு பெரிய திருவிழா), இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளது.

அருகிலுள்ள கிராமங்கள்[தொகு]

ஷாஹ்பூர், குர்ராம்பூர், அடர்மன், அக்பர்பூர் கலன், பாலோக்கி, புலாண்டா, டானுவல், ஹரிபூர், பர்ஜியன் கலன், சங்கோவ்ல், சிங்க்பூர், தண்டுரா, உடுவோல், உமாவால் பில்லா, கக்கர்ஹால் இஸ்மாயில்புர் மற்றும் கைரா ஃபுஜா சிங்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian postal website with Mehatpur's PIN code". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகத்பூர்&oldid=3587958" இலிருந்து மீள்விக்கப்பட்டது