மென்காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மென்காகம்
Lycocorax pyrrhopterus by Bowdler Sharpe.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முண்ணாணிகள்
வகுப்பு: பறவை
வரிசை: பசெரீன்கள்
குடும்பம்: சந்திரவாசி
பேரினம்: Lycocorax
போனபார்ட், 1853
இனம்: L. pyrrhopterus
இருசொற் பெயரீடு
Lycocorax pyrrhopterus
(போனபார்ட், 1850)

மென்காகம் (Lycocorax pyrrhopterus) என்பது நடுத்தர அளவான (கிட்டத்தட்ட 34 செமீ) நீளம் கொண்டதும் உருவமைப்பில் காகத்தை ஒத்ததும் சந்திரவாசிப் பறவைகளைச் சேர்ந்ததுமான ஒரு பறவையினம் ஆகும். முழுவதும் கருமையான இதன் இறகுகள் மிருதுவாகவும் பட்டுப் போன்றும் காணப்படும். இதன் சொண்டு கருமையாயும் கண்கள் கடுஞ் சிவப்பாயும் காணப்படும். இதன் ஓசை நாய் குரைப்பது போன்றிருக்கும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் ஒத்தனவாகக் காணப்படினும், பெண் பறவை ஆண் பறவையிலும் ஒப்பீட்டளவிற் சிறியதாகும்.

தனியொரு பறவையுடன் மாத்திரமே கலவியில் ஈடுபடும் வெகு சில சந்திரவாசிப் பறவையினங்களில் ஒன்றான மென்காகம், இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளின் தாழ்நிலக் காடுகளுக்கு மாத்திரமே தனிச்சிறப்பானதாகும். பழங்களும் பூச்சியினங்களுமே இதன் முதன்மையான உணவுகளாகும்.

மென்காகங்களில் மூன்று துணையினங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் இவற்றின் இறகுகளின் கீழ்ப் பகுதியில் மிகச் சிறியளவிலான வெண் வரிகள் காணப்படுவது அல்லது அறவே காணப்படாதிருப்பது என்பனவாகும்.


மேற்கோள்கள்[தொகு]

வெளித் தொடுப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்காகம்&oldid=3371320" இருந்து மீள்விக்கப்பட்டது