மெசஞ்சர் (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெசஞ்சர்
MESSENGER
MESSENGER - spacecraft at mercury - atmercury lg.jpg
புதனின் சுற்றுப்பாதையில் மெசெஞ்சர் (ஓவியரின் பார்வையில்)
இயக்குபவர் நாசா / ஏபிஎல்
முதன்மை ஒப்பந்தக்காரர் ஏபிஎல்
திட்ட வகை அணுக்கம் / விண்சுற்றுக்கலன்
அணுகிய விண்பொருள் பூமி, வெள்ளி, புதன்
செயற்கைக்கோள் புதன்
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் 2011, மார்ச் 18, 01:00 UTC[1]
ஏவப்பட்ட நாள் 2004, ஆகத்து 3, 06:15:56 UTC
(10 ஆண்டுகள், 8 மாதங்கள்,  18 நாட்கள் இற்கு முன்னர்)
ஏவுகலம் டெல்ட்டா II 7925H-9.5
ஏவு தளம் கேப் கேனவரல்
திட்டக் காலம்  பூமியை அணுக்கம்
 (2005-08-02 இல் நிறைவு)

 வெள்ளியை அணுக்கம் 1
 (2006-10-24 இல் நிறைவு)

 வெள்ளியை அணுக்கம் 2
 (2007-06-05 இல் நிறைவு)

 புதனை அணுக்கம் 1
 (2008-01-14 இல் நிறைவு)

 புதனை அணுக்கம் 2
 (2008-10-06 இல் நிறைவு)

 புதனை அணுக்கம் 3
 (2009-09-29 இல் நிறைவு)

 புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்றமை
 (2011-03-18 இல் நிறைவு)
தே.வி.அ.த.மை எண் 2004-030A
இணைய தளம் JHU/APL இணையத்தளம்
நிறை 485 கிகி (1,069 இறா)
திறன் 450 W (சூரியமின்கல அணி) / 11 NiH2 மின்கலங்கள்

மெசஞ்சர் (MErcury Surface, Space ENvironment, GEochemistry and Ranging, MESSENGER) என்பது புதன் கோளின் வேதியியல் கட்டமைப்பு, நிலவியல் அமைப்பு, மற்றும் காந்தப்புலம் போன்றவற்றை அறிவதற்காக நாசாவினால் நாசாவினால் 2004 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் ஏவப்பட்ட ஒரு அமெரிக்கத் தானியங்கி விண்கலம் ஆகும். இது 485-கிகி (1067 இறாத்தல்) எடை கொண்டது. 1975 ஆண்டில் புதனை நோக்கி அனுப்பப்பட்ட மரைனர் 10 விண்கலத்துக்கு அடுத்தபடியாக அனுப்பப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். இதுவே புதனின் சுற்றுப்பாதைக்குச் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்.

மெசஞ்சர் விண்கலம் முன்னதாக வெள்ளியை இரு தடவையும், பூமியை ஒரு தடவையும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகியுள்ளது. இதன்போது இதில் பொருத்தப்பட்ட உபகரணங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டன. 2011, மார்ச் 18 ஆம் நாள் மெசெஞ்சர் வெற்றிகரமாக புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்றது. மார்ச் 23 இல் இதன் ஆய்வு உபகரணங்கள் மீள இயக்க வைக்கப்பட்டு இதன் ஆய்வுத் திட்டப்பணிகள் ஏப்ரல் 4 இல் ஆரம்பிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  1. http://www.nasa.gov/connect/chat/messenger_chat.html


வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெசஞ்சர்_(விண்கலம்)&oldid=1359687" இருந்து மீள்விக்கப்பட்டது