மெக் ரியான்
மார்கரெட் மேரி எமிலி ஆன் ஹைரா (Meg Ryan) இவர் 1961ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 19ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தார். [1] இவர் மெக் ரியான் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றார். இவர் ஓர் அமெரிக்க நடிகை .[2] 1980களின் பிற்பகுதியிலிருந்து விசித்திரமான கதாபாத்திரங்களில், முன்னணி வேடங்களில் நடித்து பேர் பெற்றவர். 1980 முதல் 1990 வரை இவர் ஆதிக்கம் செலுத்திய காதல் நகைச்சுவை படங்களால் அங்கீகரிக்கப்பட்டார். ஊடகங்களால் "அமெரிக்காவின் அன்பானவர்" என்று அழைக்கப்பட்ட இவர், பிந்தைய தசாப்தத்தில் ஹாலிவுட்டின் மிகவும் நம்பகமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார்.
1981ஆம் ஆண்டு ரிச் அண்ட் ஃபேமஸ் என்ற நாடகத் திரைப்படத்தின் மூலம் நடிப்பில் அறிமுகமானார். 1982ஆம் ஆண்டு சிபிஎஸ் தொலைக்காட்சித் தொடரான அஸ் தி வேர்ல்ட் டர்ன்ஸ் நிகழ்ச்சியில் ரியான் பங்கு பெற்றார். 1980களில், ரியான் டாப் கன் (1986), பிராமிஸ்டு லேண்ட் (1987) மற்றும் ராப் ரெய்னர் இயக்கிய காதல் நகைச்சுவைத் திரைப்படமான வென் ஹாரி மெட் சாலி... (1989) ஆகியவற்றில் நடித்தார், இதற்காக இவர் கோல்டன் குளோப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
1990 முதல் 2000 வரை ஒரு சிறந்த நடிகையாக இருந்த ரியான் இருந்து வந்தார். 2015ஆம் ஆண்டில், இவர் இத்தாக்காவுடன் இயக்குநராக அறிமுகமானார், இதில் ரியான் நடித்தார். பின்னர் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டில் ரியான் வாட் ஹேப்பன்ஸ் லேட்டர் என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி மீண்டும் நடித்தார்.
தொடக்ககால வாழ்க்கை
[தொகு]ரியான், கனெக்டிகட்டின் ஃபேர்ஃபீல்டில், முன்னாள் நடிகையும் ஆங்கில ஆசிரியருமான சூசன் ஜோர்டான் (நீ டக்கன்) மற்றும் கணித ஆசிரியரான ஹாரி ஹைரா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.[3].இவர் ஒரு கத்தோலிக்கராக வளர்ந்தார். மேலும் ஃபேர்ஃபீல்டில் உள்ள செயிண்ட் பியஸ் எக்சு என்ற தொடக்கப்பள்ளியில் பயின்றார். இவருக்கு இரண்டு சகோதரிகளும், பில்லி பில்கிரிம் இசைக்குழுவின் உறுப்பினரான இசைக்கலைஞர் ஆண்ட்ரூ ஹைரா என்ற சகோதரரும் உள்ளனர். இவரது பெற்றோர் 1976 இல் அவருக்கு 15 வயதாக இருந்தபோது விவாகரத்து செய்தனர்.[4]
ரியான் 1979ஆம் ஆண்டு பெத்தேல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[5]இவர் இளங்கலைப் பட்டதாரியாக பத்திரிகைப் படிப்பைப் பயின்றார். முதலில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்திலும் பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் படித்தார். கல்லூரியில் படிக்கும் போது, கூடுதல் பணம் சம்பாதிக்க தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்தார். ஒரு நடிகையாக இவரது வெற்றி, தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் முன்பே கல்லூரியை விட்டு வெளியேற வெளியேறினார். [6][7] இவர் தனது தாய்வழி பாட்டியின் இயற்பெயர் "ரியான்" என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்தினார். [3]
தொடக்ககால தொழில்
[தொகு]
1981ஆம் ஆண்டு இயக்குனர் ஜார்ஜ் குகோரின் இறுதிப் படமான ரிச் அண்ட் ஃபேமஸ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு, ரியான் 1982 முதல் 1984 வரை பகல்நேர நாடகமான அஸ் தி வேர்ல்ட் டர்ன்ஸ் திரைப்படத்தில் பெட்சி ஸ்டீவர்ட்டாக நடித்து வந்தார். இவரது கதாபாத்திரம் ஒரு பிரபலமான காதல் கதை வளைவில் இடம்பெற்றது. 1980களின் முற்பகுதியில் பர்கர் கிங் மற்றும் ஐம் டூத்பேஸ்டுக்காக என்ற சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இவர் நடித்தார். இதைத் தொடர்ந்து பல தொலைக்காட்சி மற்றும் சிறிய திரைப்பட வேடங்களில் நடித்து வந்தார், அவற்றில் சார்லஸ் இன் சார்ஜ், ஆர்ம்ட் அண்ட் டேஞ்சரஸ் மற்றும் அமிட்டிவில் 3-டி ஆகிய படங்களில் நடித்து வந்தார். 1987 ஆம் ஆண்டு ப்ராமிஸ்டு லேண்ட் திரைப்படத்தில் இவர் நடித்த பாத்திரம் ரியானுக்கு முதல் இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றது.
1986 ஆம் ஆண்டில், டாப் கன்னில் அந்தோணி எட்வர்ட்ஸின் கதாபாத்திரமான கடற்படை விமான அதிகாரி நிக் "கூஸ்" பிராட்ஷாவின் மனைவியான கரோல் பிராட்ஷாவாக நடித்தார். இவர்களுடனான காட்சிகள் 2022 ஆம் ஆண்டு தொடர்ச்சியான டாப் கன்: மேவரிக் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரமான பீட் "மேவரிக்" மிட்செல் (டாம் குரூஸ்) மற்றும் பிராட்ஷாக்களின் வளர்ந்த மகன் பிராட்லி "ரூஸ்டர்" பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) இடையேயான உணர்ச்சி மோதல்களை விளக்குவதற்கு ஃப்ளாஷ்பேக்குகளாக மீண்டும் காட்டப்பட்டன.
ரியான் 1987 ஆம் ஆண்டு தனது வருங்கால கணவர் டென்னிஸ் காயிடுடன் இன்னர்ஸ்பேஸ் திரைப்படத்தில் ந்டித்தார். இதைத் தொடர்ந்து இவர்கள் சில ரீமேக் படங்களிலும் இணைந்து நடித்தனர். 1988 ஆம் ஆண்டு, ரியான் தி பிரெசிடியோவில் சீன் கானரி மற்றும் மார்க் ஹார்மனுடன் இணைந்து நடித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ரியான் நடிகர் டென்னிஸ் காயிட் என்பவரை 1991 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 14 ஆம் தேதியன்று மணந்தார். இவர்களுக்கு 1992 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 24 ஆம் தேதி ஜாக் காயிட் என்ற ஒரு குழந்தை பிறந்தது. [8][9] ரியானும் காயிடும் ஜூன் 2000 ஆம் ஆண்டில் பிரிந்ததாக அறிவித்தனர், [10] மேலும் இவர்களின் விவாகரத்து ஜூலை 2001 இல் இறுதியானது. [11]இரு தரப்பிலும் துரோக குற்றச்சாட்டுகள் இருந்தன,[12] மேலும் ரியானின் புகழ் விவாகரத்துக்கு ஒரு காரணியாக இருந்தது என்று காயிட் கூறினார். [13]
2000 ஆம் ஆண்டு வெளியான ப்ரூஃப் ஆஃப் லைஃப் திரைப்படத்தில் பணிபுரியும் போது, நடிகர் ரஸ்ஸல் குரோவுடன் ரியான் காதல் கொண்டார்.[14]
ஜனவரி 2006 இல், ரியான் சீனாவைச் சேர்ந்த 14 மாத பெண் குழந்தையைத் தத்தெடுத்தார், அந்த குழந்தைக்கு டெய்சி ட்ரூ என்று பெயரிட்டார். [15][16] 2010 முதல் 2014 வரை, ரியான் அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் ஜான் மெல்லன்கேம்பு என்பருடன் சேர்ந்து வாழ்ந்தார்.[17][18][19] 2017 இல் மீண்டும் இணைந்த இவர்கள், [20] 2018 ஆண்டு, நவம்பர் மாதம், 8 ஆம் தேதியன்று ரியான் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். [21] 2019 ஆண்டில், அக்டோபர் மாதம் ரியான் தங்கள் நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டதாக தெரிவித்தார். [22]
அரசியல் கருத்துக்கள்
[தொகு]ரியான் ஜனநாயகக் கட்சியை, குறிப்பாக அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை பகிரங்கமாக ஆதரித்து வந்தார். [23][24] 2003 ஆம் ஆண்டில், இவர் வெஸ்லி கிளார்க்கின் அமெரிக்க ஜனாதிபதி பிரச்சாரத்தை ஆதரித்தார். [25]பின்னர் 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஜான் கெர்ரியை ஆதரித்தார். [26] பின்னர் 2004 ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஜான் கெர்ரியை ஆதரித்தார். [27]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Happy Birthday Meg Ryan, 50". The Times. November 19, 2011.
- ↑ Hopewell, John (August 3, 2018). "Locarno Laureled Meg Ryan Prepares 'The Obsolescents' (EXCLUSIVE)". Variety (magazine) இம் மூலத்தில் இருந்து September 2, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230902114801/https://variety.com/2018/film/news/locarno-laureled-meg-ryan-the-obsolescents-1202895280/. "the Locarno Leopard Club Award finds Ryan more these days 'in the director and producer mode'"
- ↑ 3.0 3.1 Parish, J.R. (2010). The Hollywood Book of Breakups. Wiley. ISBN 978-1-118-04067-6. Retrieved May 20, 2015.
- ↑ "Meg Ryan". Yahoo! Movies. Retrieved October 25, 2013.
- ↑ "1979 Bethel High Yearbook". Classmates. Retrieved July 28, 2014.
- ↑ Ryan interview with Parkinson on YouTube
- ↑ "Meg Ryan talks to Parkinson", bbc.co.uk, October 24, 2003.
- ↑ Lafuente, Cat (February 12, 2019). "Meg Ryan's son has grown up to be gorgeous". The List (magazine). Retrieved September 26, 2020.
{{cite web}}
: Text "The List" ignored (help) - ↑ "Genealogy". geni.com. Retrieved April 18, 2011.
- ↑ Schneider, Karen S. (July 17, 2000). "Sweethearts Sour". People.com. Retrieved September 28, 2021.
- ↑ Wilkins, Vanessa (March 25, 2016). "Meg Ryan and Dennis Quaid's Son Jack Opens Up About Parents' Divorce". ABC News (United States). Retrieved October 6, 2021.
{{cite web}}
: Text "ABC News" ignored (help) - ↑ Gray, Delilah (2024-09-25). "Dennis Quaid Is Allegedly Driving Ex-Wife Meg Ryan 'Up the Wall' With His Comments About Their Son". Yahoo Entertainment (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-25.
- ↑ "Dennis Quaid Admits Meg Ryan's Fame Played a Role in Their Split: 'I Disappeared'". People.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-25.
- ↑ "Meg Ryan admits to breaking Russell Crowe's heart". The Sydney Morning Herald. September 24, 2008. Retrieved September 28, 2021.
- ↑ "Meg Ryan Adopts a Girl". People (American magazine). January 25, 2006. Retrieved April 6, 2022.
{{cite web}}
: Text "People" ignored (help) - ↑ "Meg Ryan and Daisy True shop at Whole Foods". People (American magazine). December 26, 2007. Archived from the original on November 20, 2012. Retrieved March 14, 2012.
{{cite web}}
: Text "People" ignored (help) - ↑ Leopold, Todd (August 21, 2014). "Meg Ryan, John Mellencamp break up". CNN. Retrieved September 28, 2021.
- ↑ Corinthios, Aurelie (October 22, 2014). "Meg Ryan and John Mellencamp 'Are Back Together': Source". PEOPLE.com. Retrieved September 28, 2021.
- ↑ "Meg Ryan & John Mellencamp Split "A Couple of Weeks Ago"". Closer Weekly. August 20, 2014. Retrieved January 31, 2021.
- ↑ Guglielmi, Jodi (July 27, 2017). "Meg Ryan and John Mellencamp Are Back Together". People. Retrieved January 31, 2021.
- ↑ Gonzalez, Sandra (November 9, 2018). "Meg Ryan and John Mellencamp are engaged". CNN (in ஆங்கிலம்). Retrieved September 26, 2020.
- ↑ Hautman, Nicholas (October 30, 2019). "Meg Ryan and John Mellencamp Split, Call Off Engagement: She 'Had Enough'". Us Weekly. Retrieved November 27, 2019.
- ↑ Colavecchio-van Sickler, Shannon; Amrhein, Saundra (October 27, 2004). "Star-studded roster covers area for Kerry". St. Petersburg Times. http://www.sptimes.com/2004/10/27/Decision2004/Star_studded_roster_c.shtml.
- ↑ Ortiz, Vikki (October 28, 2004). "When Meg met Milwaukee". Milwaukee Journal Sentinel. https://news.google.com/newspapers?id=OqgaAAAAIBAJ&pg=4477,3216530&dq=.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Meg Ryan's Federal Campaign Contribution Report". Newsmeat. Archived from the original on January 16, 2013. Retrieved January 27, 2013.
- ↑ "Meg Ryan's Federal Campaign Contribution Report". Newsmeat. Archived from the original on January 16, 2013. Retrieved January 27, 2013.
- ↑ "Kerry campaigns the Hol(l)y way". The Times of India. October 27, 2004 இம் மூலத்தில் இருந்து May 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523043015/http://articles.timesofindia.indiatimes.com/2004-10-27/news-interviews/27154354_1_offshore-oil-drilling-kerry-campaigns-john-kerry-supporters.