மெகர் பாபா
Meher Baba | |
---|---|
![]() Meher Baba in 1945 | |
முழுப் பெயர் | Meher Baba |
பிறப்பு | Merwan Sheriar Irani பெப்ரவரி 25, 1894 பூனே, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 31 சனவரி 1969 Meherazad, India | (அகவை 74)
முக்கிய ஆர்வங்கள் | சமயம், metaphysics, aesthetics, ethics |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
கையெழுத்து | ![]() |
மெகர் பாபா (Meher Baba) என்பவர் ஆன்மீகவாதியாவார். இவர், தான் கடவுளின் அவதாரம் எனக் கூறினார்..[1][2][3][4][5] இவருடைய இயற்பெயர் மெர்வான் ஷெரியார் இரானி. 1894-ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி பிறந்தவர். இவர் ஜோராஷ்ட்ரிய சமயத்தைத் சேர்ந்தவர். புனேயைச் சேர்ந்த ஆன்மீக குருக்கள் ஐந்து பேரிடம் சீடராக இருந்த மெகர் பாபா, 1922-ம் ஆண்டில் தனது ஆன்மீக பணிகளைச் தொடங்கினார்.1920-ம் ஆண்டு தனது சீடர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத் நகரில் ஆன்மீக அமைப்பை உருவாக்கினார். 1940களில் இந்தியா முழுவதும் பயணம் செய்து ஏழைகள்,தொழுநோயாளிகள்,மனநலப் பாதிப்புற்ற வர்களுக்கு பணி புரிவதற்கான ஆசிரமங்களை உருவாக்கினார். [சான்று தேவை] 1969ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் மெகர் பாபா இயற்கை எய்தினார்.இன்றும் அஹமது நகருக்கு அருகில் மெகராபாத்தில் அமைந்துள்ள இவரின் சமாதிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.