மூலக்கூற்று நோயியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

மூலக்கூற்று நோயியல் (Molecular pathology) மருத்துவத்துறையில் வளர்ந்துவரும் ஒரு துறையாகும். உடல் உறுப்புகள், திசுக்கள் அல்லது உடல் திரவங்களில் உள்ள மூலக்கூறுகளை பரிசோதனை ஆய்வு செய்வதன் மூலம் நோய்களைக் கண்டறிவதில் இத்துறை கவனம் செலுத்துகிறது.[1] உடற்கூற்று நோயியல் மற்றும் மருத்துவ நோயியல், மூலக்கூற்று உயிரியல், உயிர் வேதியியல், புரத அறிவியல் மற்றும் மரபியல் ஆகிய துறைகளின் சில நடைமுறை அம்சங்களை மூலக்கூற்று நோயியல் பகிர்ந்து கொள்கிறது. சில நேரங்களில் இத்துறைகள் அனைத்தையும் விஞ்சிய ஒரு துறையாகவும் இது கருதப்படுகிறது. இயற்கையில் பலதரப்பட்ட மற்றும் முக்கியமாக நோயின் துணை நுண்ணிய அம்சங்களில் மூலக்கூற்று நோயியல் கவனம் செலுத்துகிறது. திசுக்களில் உள்ள உருவவியல் மாற்றங்கள் (பாரம்பரிய உடற்கூறியல் நோயியல்) மற்றும் மூலக்கூற்று சோதனை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு நோயறிதல் செய்யப்படும்போது மிகவும் துல்லியமான நோயறிதல் சாத்தியமாகும் என்பது ஒரு முக்கிய கருத்தாகும். [2]

இது மனித நோய்களைக் கண்டறிதல் மற்றும் வகைப்படுத்துவதற்கான மூலக்கூறு மற்றும் மரபணு அணுகுமுறைகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய ஒரு அறிவியல் ஒழுக்கம் ஆகும். சிகிச்சையின் விளைவுகளையும், நோய் முன்னேற்றத்திற்கான முன்கணிப்பு உயிரிச்சுட்டுகளை வடிவமைத்தல் மற்றும் சரிபார்த்தல், பல்வேறு மரபணு அமைப்புகளின் தனிக்கூறுகளில் கோளாறுகளை உருவாக்குவதற்கான மூலக்கூறு மற்றும் மரபணு அணுகுமுறைகளின் வளர்ச்சியையும் இத்துறை உள்ளடக்கியுள்ளது.

மூலக்கூறு நோயியல் பொதுவாக புற்றுநோய் மற்றும் தொற்று நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது. இத்துறை நுட்பங்கள் பலவாகும். பாலிமரேசு சங்கிலி வினை அளவியல் , பன்மையாக்க பாலிமரேசு சங்கிலி வினை, டிஎன்ஏ நுண் வரிசை முறை , கள இனக்கலப்பு , கள ஆர்என்ஏ வரிசைமுறை, [3] எதிர்புரத அடிப்படையிலான நோய்த்தடுப்பாற்றல் உடனொளிர்வு திசு மதிப்பீடு, நோய்க்கிருமிகளின் மூலக்கூற்று விவரக்குறிப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிக்கான பாக்டீரியா மரபணுக்களின் பகுப்பாய்வு ஆகியவை இந்நுட்பங்களில் அடங்கும்.[2]

மூலக்கூறு நோயியல் மற்றும் நோய்த்தொற்றியல் துறைகளின் ஒருங்கிணைப்பினால் மூலக்கூற்று நோயியல் நோய்த்தொற்றியல் [4] [5] [6] என்ற ஒரு புதிய துறை உருவாகிறது. இது ஒருங்கிணைந்த மூலக்கூறு உயிரியல் மற்றும் மக்கள் தொகையில் சுகாதார அறிவியலில் பிரதிபலிக்கிறது.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The molecular pathology of cancer". Nat Rev Clin Oncol 7 (5): 251–265. 2010. doi:10.1038/nrclinonc.2010.41. பப்மெட்:20351699. 
  2. 2.0 2.1 Cai, H; Caswell JL; Prescott JF (March 2014). "Nonculture Molecular Techniques for Diagnosis of Bacterial Disease in Animals: A Diagnostic Laboratory Perspective". Veterinary Pathology 51 (2): 341–350. doi:10.1177/0300985813511132. பப்மெட்:24569613. Cai, H; Caswell JL; Prescott JF (March 2014). "Nonculture Molecular Techniques for Diagnosis of Bacterial Disease in Animals: A Diagnostic Laboratory Perspective". Veterinary Pathology. 51 (2): 341–350. doi:10.1177/0300985813511132. PMID 24569613.
  3. Ke, Rongqin; Mignardi, Marco; Pacureanu, Alexandra; Svedlund, Jessica; Botling, Johan; Wählby, Carolina; Nilsson, Mats (2013-07-14). "In situ sequencing for RNA analysis in preserved tissue and cells" (in En). Nature Methods 10 (9): 857–860. doi:10.1038/nmeth.2563. பன்னாட்டுத் தர தொடர் எண்:1548-7091. பப்மெட்:23852452. https://zenodo.org/record/3426036. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Ogino, Shuji; Stampfer, Meir (17 March 2010). "Lifestyle Factors and Microsatellite Instability in Colorectal Cancer: The Evolving Field of Molecular Pathological Epidemiology". Journal of the National Cancer Institute 102 (6): 365-7. doi:10.1093/jnci/djq031. பப்மெட்:20208016. 
  5. Ogino S, Chan AT, Fuchs CS, Giovannucci E. Molecular pathological epidemiology of colorectal neoplasia: an emerging transdisciplinary and interdisciplinary field. Gut 2011; 60: 397-411.
  6. Ogino S, Lochhead P, Chan AT, Nishihara R, Cho E, Wolpin BM, Meyerhardt AJ, Meissner A, Schernhammer ES, Fuchs CS, Giovannucci E. Molecular pathological epidemiology of epigenetics: emerging integrative science to analyze environment, host, and disease. Mod Pathol 2013; 26: 465-84.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கூற்று_நோயியல்&oldid=3351393" இலிருந்து மீள்விக்கப்பட்டது