மூதூர்
Appearance
மூதூர் | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணங்கள் | கிழக்கு மாகாணம் |
மாவட்டங்கள் | திருகோணமலை |
பிரதேச செயலாளர் பிரிவு | மூதூர் |
மூதூர் என்பது கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். கடல் சார்ந்து இருக்கும் இந்த நகரில் ஆரம்ப காலத்தில் முத்துக் குளிக்கும் தொழில் பிரபலமாக இருந்ததாகவும் இதனால் இவ்வூருக்கு முத்தூர் என்று பெயர் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் காலவோட்டத்தில் பெயர் மருவி மூதூர் என்று ஆகியுள்ளது. இங்கு முஸ்லிம் மக்களும் மூதூரின் கிழக்குப் பகுதி மற்றும் தெற்கு பகுதியிலும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.