மூக்கன் (பறவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூக்கன் (அ)
பேருள்ளான்
BartailedGodwit24.jpg
காட்விட் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Charadriiformes
குடும்பம்: Scolopacidae
பேரினம்: லிமோசா
பிறிசன், 1760
இனங்கள்

4, see text.

மூக்கன் அல்லது பேருள்ளான் எனப்படும் காட்விட் (Godvit) என்னும் பறவை லிமோசா (limosa) இனத்தைச் சேர்ந்தது. இவை இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும். ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை.[1] ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.

ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட் பறவை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது. மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன. காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் ஏரோடைனமிக் உடல் அமைப்பும் உதவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. எஸ்.கல்யாணசுந்தரம் (19 மார்ச் 2017). "எங்கும் நிற்காமல் பல ஆயிரம் கி.மீ. தொலைவு பறக்கும் சாதனை பறவை: 'கருவால் மூக்கான்' கிளியூர் குளத்துக்கு வலசை வருகை". செய்தி. தி இந்து. 19 மார்ச் 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கன்_(பறவை)&oldid=3578094" இருந்து மீள்விக்கப்பட்டது