மு. ரா. கந்தசாமிக் கவிராயர்
மு. ரா. கந்தசாமிக் கவிராயர் (இறப்பு: 1948) தமிழகப் புலவரும், பத்திரிகாசிரியரும், பதிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன் ஆவார். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு கொண்டிருந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் 1909 ல் மதுரையில் விவேகபாநு அச்சகம் தொடங்கி, "விவேகபாநு', 'வித்தியாபாநு' ஆகிய பத்திரிகைகளையும் நடத்தியவர்.[1] ஆரணிய காண்டத்திற்கு 1903-இல் உரை இயற்றினார்.[2] இவர் சேற்றூர் சமத்தான வித்துவானும், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும், திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களுள் ஒருவரும் ஆவார்.[3] மு. ரா. அருணாசலக் கவிராயர் இவரது அண்ணன் ஆவார்.
இவரின் படைப்புகள்[தொகு]
- திருப்பேரூர் திரிபந்தாதி
- குமண சரித்திரம் (1907, 1913)
- பவ நிவேத நாயகியம்மை பிள்ளைத்தமிழ்
- கருமலையாண்டவர் துதி மஞ்சரி
- அரிமழத் தலபுராணம் (1907)
- வியாசத் திரட்டு (இரண்டு பாகம், 1915)
- தனிச்செய்யுட் சிந்தாமணி (பல புலவர்களியற்றிய செய்யுள்களின் தொகுப்பு, 767 பக்கங்கள், 1908)
- ஸ்ரீமத் கம்பராமாயணம்: ஆரணியகாண்டம் மூலமும் உரையும்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கவிராயர்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2022-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "அருந்தமிழ்ப் புலவோர்". 2014-02-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-16 அன்று பார்க்கப்பட்டது.