முள்ளுதாரா தேவி கோயில், மலமேக்கரா
Appearance
மலமேக்கரா முள்ளுதரா தேவி கோயில் இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மலமேக்கராவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . [1] [2] இந்தக் கோயில் களரிக்கான பயிற்சி மையமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதோடு, எழுத்துக் களரி, ஆயுர்வேதம், சோதிடம் ஆகியவற்றைக் கற்பிக்கும் கணியர்களின் தாயகமாகவும் இருந்து வருகிறது. [1]
விழாக்கள்
[தொகு]கோயிலின் முக்கிய சடங்கு குத்தியோட்டம் ஆகும். இது பராசக்தி, மகிஷாசுரனை வென்றதை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு நடன வடிவமாகும். [1] நடனக் கலைஞர்கள் பராசத்தியின் காயமடைந்த வீரர்களாகக் கருதப்படுகிறார்கள். கும்ப மாதத்தில் (பிப்ரவரி பிற்பகுதியில் இருந்து மார்ச் தொடக்கத்தில்) நடைபெறுகின்ற ஜீவித எழுநுளிப்பும், அப்பிண்டி விளக்கும் கோயிலில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். [3] [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "ആപ്പിണ്ടിവിളക്കും ജീവിതഎഴുന്നെളളിപ്പും ; ആചാരപ്പെരുമയിൽ മുള്ളുതറ ദേവീക്ഷേത്രം" (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "മലമേക്കര മുളളുതറ ദേവീ ക്ഷേത്രത്തിലെ അത്തം മഹോത്സവം" (in மலையாளம்).
- ↑ "ഉദ്ദിഷ്ടകാര്യ സിദ്ധിയ്ക്ക് തൊഴാം മുള്ളുതറയിൽ ശ്രീ ഭദ്രാ കരിംകാളിയമ്മയെ" (in மலையாளம்).