முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி45

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி45
rocket
திட்ட வகை29 செயற்கைக்கோள்களுடன்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்ISRO website
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏற்புச்சுமை-நிறை436 கிகி
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்09:27:00, 1 ஏப்ரல் 2019 (2019-04-01T09:27:00) (IST)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்ஸ்ரீஹரிகோட்டா
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
----
முனைய துணைக்கோள் ஏவுகணைத் திட்டம்
← முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி44 முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி46

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி45 (PSLV-C45) இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 47ஆவது ஏவுதல் ஆகும்.[1]இந்த ஏவுதலில் இந்திய இராணுவ பயன்பாட்டுக்கான எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த ஏவுகலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் 2ஆவது தளத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் காலை 09.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. [2]

செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்[தொகு]

ஏவூர்தியானது தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடம் 12 வினாடிகளுக்குப் பிறகு ‘எமிசாட்’ செயற்கைக் கோளை 748 கி.மீ. துாரத்தில் புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தியது. அதன்பின் ஏவூர்தியின் நான்காவது மற்றும் இறுதி நிலையான பிஎஸ் 4 இயந்திரம் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் பயணித்த பிறகு 504 கிலோமீட்டர் தொலைவில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் நிலை நிறுத்தியது. தொடர்ந்து பிஎஸ்4 இயந்திரம் படிப்படியாக மற்றொரு சுற்றுப்பாதைக்கு உந்தித்தள்ளப்பட்டு, சோதனைரீதியாக அதில் வைக்கப்பட்டிருந்த 3 ஆய்வு சாதனங்கள் 485 கிலோமீட்டர் துாரத்தில் நிலைநிறுத்தப்பட்டன. தரையிலிருந்து புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் ஏவூர்தியானது திட்டமிடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்தது.[3]

பயன்பாட்டு நோக்கம்[தொகு]

முனைய துணைக்கோள் ஏவுகலம் சி45

இந்த ஏவூர்தியினால் நிலைநிறுத்தப்பட்ட எமிசாட் மின்காந்த அலைகளைத் துல்லியமாக கண்காணிக்கவும், இராணுவத்தில் உளவுப்பணிகளுக்கும், பிற நாடுகளின் தகவல் தொடர்பு அமைப்புகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படும். நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் ரேடியோ அலைக்கற்றைகள் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புகளைக் கண்காணிக்க உதவும் உள்நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும். மேலும், பரிசோதனை முயற்சியாக 6 மாத ஆயுட்காலம் கொண்ட 3 ஆய்வு சாதனங்களும் ஏவப்பட்டுள்ளன.

திட்டத்தின் தனித்துவம்[தொகு]

முனைய துணைக்கோள் ஏவுகலமானது முதன்முறையாக, செயற்கைக்கோள்களை மூன்று வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிறுத்தியிருப்பதே இந்த திட்டத்தின் தனித்துவமும் சிறப்பும் ஆகும்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PSLV". Space.skyrocket.de. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  2. "ராணுவ பயன்பாட்டுக்கான 'எமிசாட்' உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை". இந்து தமிழ் திசை. 2 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "PSLV-C45/EMISAT MISSION". ISRO. 1 ஏப்ரல் 2019. Archived from the original on 2019-04-01. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "India to launch first 3 orbit mission with PSLV-C45 on March 21". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 24 February 2019. https://www.business-standard.com/article/news-ani/india-to-launch-first-3-orbit-mission-with-pslv-c45-on-march-21-119022400033_1.html. பார்த்த நாள்: 25 February 2019. 
  5. "India All Set To Launch Its First Mission That Will Put 30 Satellites In 3 Different Orbits". Indiatimes.com. 24 February 2019. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  6. Economictimes. "ISRO will launch first 3 orbit mission with PSLV-C45 on March 21". Economictimes.indiatimes.com. Archived from the original on 26 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)