முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி44

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஎஸ்எல்வி-சி44
PSLV-C44 at First Launch Pad SDSC SHAR Sriharikota 06.jpg
திட்ட வகை2 செயற்கைக்கோள்களை விண்வெளிப்பாதையில் நிலைநிறுத்துதல்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்இந்திய விண்வெளி ஆய்வு மைய இணையத்தளம்
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு2,60,000 கிகி[1]
ஏற்புச்சுமை-நிறைகிகி
பரிமாணங்கள்மீ
(overall height)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்23:37:00, 24 சனவரி 2019 (2019-01-24T23:37:00) (இந்திய சீர் நேரம்)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மைய முதல் ஏவுதளம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
Payload
List of Satellites:
  • இந்தியா Microsat-R
  • இந்தியா Kalamsat-V2
திணிவுகிகி
----
Polar Satellite Launch Vehicle missions
← PSLV-C43 PSLV-C45

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி44 (PSLV-C44) இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 46ஆவது ஏவுதல் ஆகும். இந்த ஏவுகலம் சனவரி 24, 2019 அன்று இந்திய சீர் நேரம் 23.37 அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகலம் மைக்ரோசாட்-ஆர் மற்றும் கலாம்சாட்-வி2 ஆகிய செயற்கைக் கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது. இவற்றில் கலாம்சாட்-வி2 என்பது சென்னையைச் சார்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் தயாரிப்பாகும். இந்தக் குழுவில் ரிபத் சாரூக் தலைமையில் தமிழக பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக் கோள் ஆகும். இந்த செயற்கைக்கோளின் ஆயுள் 2 மாதங்களாகும். கலாம்சாட்-வி2 செயற்கைக் கோளின் எடை 1 கிலோ 260 கிராம் ஆகும்.[2] வழக்கமாக பிஎஸ்எல்சி ஏவுகலத்தின் நான்காவது பிரிவு விண்வெளியிலேயே கைவிடப்படும். ஆனால் இந்த பிஎஸ்எல்வி சி44 ஏவுகலத்தின் நான்காம் பிரிவு சோதனை முயற்சிகளுக்காக விண்வெளியில் பயன்படுத்தப்பட உள்ளது. மற்றொரு செயற்கைக்கோளான மைக்ரோசாட்-ஆர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கலாம்சாட் V2: உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவிய இந்தியா". BBC News Tamil. 25 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2019.
  2. "வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்!". நியூஸ் 18. 25 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2019.