முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37
Model of a rocket
திட்ட வகை104 செயற்கைக்கோள்fs;
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்ISRO website
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு320,000 கிலோகிராம்கள் (710,000 lb)
ஏற்புச்சுமை-நிறை1,378 கிலோகிராம்கள் (3,038 lb)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்09:28:00, 15 பெப்ரவரி 2017 (2017-02-15T09:28:00) (IST)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்Sriharikota Launching Range
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
Payload
திணிவு1,378 கிலோகிராம்கள் (3,038 lb)
----
Polar Satellite Launch Vehicle missions
← இரிசோர்சுசாட்-2ஏ PSLV-C38

முனைய துணைக்கோள் ஏவுகலம் சி-37 (PSLV-C37) ஏவுகலம் மூலம், 104 நானோ செயற்கைக்கோள்கள் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த முனைய துணைக்கோள் ஏவுகலம் சி-37 ஏவுகலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 15ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.[1] பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில், 39-ஆவது ஏவுதல் இதுவாகும். இந்த ராக்கெட் இந்தியாவின் 714 கிலோ எடைகொண்ட கார்டோசாட் வரிசையின் 2ஆவது செயற்கைக்கோளையும் சுமந்துச் செல்கிறது.[2][3][4] 

PSLV-C37, ஏவப்படும் இருநாட்களுக்கு முன்னர், (சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா)

கார்டோசாட்-2 செயற்கைக்கோள் பூமியை படமெடுக்கவும், கடல் வழி போக்குவரத்தை கண்காணிக்கவும், நீர்வள மேம்பாட்டுக்கும், காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும் உதவும். இந்தியாவின் இரண்டு மீநுண் செயற்கைக்கோள்களான ஐ.என்.எஸ் 1ஏ, ஐ.என்.எஸ்.1பி ஆகியவையும் இதில் அடங்கும்.

இத்துடன் இணைந்து, 664 கிலோ மொத்த எடை கொண்ட மற்ற நாடுகளின் 103 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன. இதில் இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் தலா ஒரு நானோ செயற்கைக்கோளுடனும், அமெரிக்காவில் இருந்து மொத்தம் 96 நானோ செயற்கைக்கோள்களுடன் பயணிக்கவுள்ளது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட். இந்த மீநுண் செயற்கைகோள்கள் ஒவ்வொன்றும், 5 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

சுமை திறன் மற்றும் பிறஅளவுறுக்கள்[தொகு]

 • நிறை: மொத்த எடை: 320,000 கிலோகிராம் (710,000 பவுண்டு) 
 • சுமை எடை: 1,378 கிலோகிராம் (3,038 பவுண்டு) 
 • ஒட்டுமொத்த உயரம்: 44.4 மீட்டர் (145.7 அடி) 
 • ஓட்டு: நிலை 1: திட HTPB அடிப்படையிலானது 
 • நிலை 2: திரவ UH 25 + N2O4 
 • நிலை 3: திட HTPB அடிப்படையிலானது 
 • நிலை 4: திரவ MMH + MON-3 
 • உயரம்: 505 கிலோமீட்டர் (314 மைல்) 
 • அதிகபட்ச வேகம்: வினாடிக்கு 7,809.52 மீட்டர் (25,622 அடி / கள்) (காரோட்டோசாட் -2 டி பிரிவின் நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது) 
 • சாய்வு: 97.46 ° 
 • காலம்: 94.72 நிமிடங்கள் 
 • [1]

கார்டோசாட் விவரம்[தொகு]

கார்டோசாட் செயற்கைக்கோள்கள் 2005ஆம் ஆண்டு முதல் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. 2007 ஆம் ஆண்டு ஏவப்பட்ட கார்டோசாட்-2ஏ செயற்கைக்கோள்தான் அண்டை நாடுகள் விண்ணில் ஏவும் செயற்கைக்கோள்களை கண்காணித்தது. 2016ஆம் ஆண்டு சூன் மாதம் 22ஆம் தேதி ஏவப்பட்ட கார்டோசாட்-2சி தான் சூரிய வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, பூமியை கண்காணிக்கும் வகையில் அனுப்பப்பட்டது. மேலும், மின்காந்த நிறமாலையில் செயல்படும் வகையில் சிறப்பு கேமிரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. விநாடி துளிகளில் பூமியின் எந்த பகுதியையும் மிகவும் தெளிவாக படம் பிடித்து தள்ளும் சிறப்புமிக்கது. முக்கியமான பகுதிகளை வீடியோவாகவும், நீண்ட புகைப்படமாகவும் எடுக்கும் திறன் படைத்தது. பூமியில் எந்த ஒரு பகுதியையும் தெளிவுடன் உயர் தொழில்நுட்பத்தில் படம் பிடித்து அனுப்ப கூடியது இந்தச் செயற்கைக்கோள். கார்டோசாட்-2 செயற்கைக் கோள் அனுப்புகிற படங்கள் வரை படப் பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர் விநியோகம், தரை பயன்பாட்டு வரைபடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் இந்த ஏவுதலுக்கான செலவு $ 15 மில்லியன் ஆகும். இஸ்ரோவின் அறிக்கையின்படி, பல சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இதுவரை 101 சர்வதேச செயற்கைக்கோள்கள் வர்த்தகமுறையில் ஏவப்பட்டுள்ளது, இந்திய அரசாங்க துறையின் கீழ் இயங்கும் ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் இஸ்ரோவின் வணிகப் பிரிவு ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]