முத்துநிலவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துநிலவன்

நா. முத்து நிலவன் (ஆங்கிலம்:Muthu Nilavan) என அழைக்கப்படும் முத்துபாஸ்கரன் தமிழ் நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.[1] 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[2]

வரலாறு[தொகு]

புதுக்கோட்டையில் வசிக்கும் கவிஞர்களுள் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார். மிகச் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர், ஊடகங்களில் பேசுதல், எழுதுதல், மற்றும் சமூகத் தளங்களில் இயங்குதல் ஆகியவற்றால் அறியப்படுபவர். மேலும் 2014 ஆம் ஆண்டு மே 17, 18 ஆகிய இரண்டு நாட்களில் வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு இணையதள பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு இணையதளப் பயன்பாடுகள், வலைத்தளங்கள் உருவாக்குதல் குறித்து பயிற்சியளித்துள்ளார்.[3] 11 அக்டோபர் 2015இல் புதுக்கோட்டையில் நடந்த “வலைப்பதிவர் திருவிழா”வை கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து நடத்தியவர்.

இவர் தொடர்ந்து தமிழாசிரியர் சங்கத்தின் மூலமாகவும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாகவும் இருமுறை பயிற்சிகளை தந்திருக்கிறார்.

முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அருள்முருகனின் வழிகாட்டுதலின்படி இப்பயிற்சிகளை தமிழகத்தின் பெரும் இலக்கிய ஆளுமைகளும், பதிவர்களும் ஆசிரியர்களுக்கு தந்தனர்.[4]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

தமிழகத்தில் பொதிகை, சன், கலைஞர், விஜய், ஜெயா, பாலிமர், உள்ளிட்ட பெரும்பாலான தொலைக்காட்சிகளும், உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகளும் நடத்தியுள்ள இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.[2]

நூல்கள்[தொகு]

 • புதிய மரபுகள் (கவிதைத்தொகுப்பு),[5] அன்னம் பதிப்பகம், 2ஆம் பதிப்பு, 2014
 • 20ஆம் நூற்றாண்டு இலக்கியவாதிகள், (திறனாய்வு), 1995
 • நேற்று ஆங்கிலம் இன்று தமிழ் (கட்டுரைத்தொகுப்பு), 2003
 • நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவோம் பேசுவோம், 2008
 • முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே, 2014
 • கம்பன் தமிழும் கணினித்தமிழும், 2014
 • புதிய மரபுகள், 2014

வெளிநாட்டுப்பயணங்கள்[தொகு]

35 ஆண்டுகளாக இலக்கிய, பட்டிமன்றப் பேச்சாளராக தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்கள், இந்தியாவில் புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட், மஸ்கட், கத்தார், குவைத், ஜாம்பியா, சிசிலிஸ் போன்ற நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.[2]

விருதுகள்[தொகு]

 • பாரதிதாசன் விருது (கவிஞர் மு.மேத்தா அவர்களிடமிருந்து)
 • சிறந்த கவிதைத்தொகுப்பிற்கான விருது (தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம், எட்டயபுரம், 1993)
 • கல்கி நினைவு சிறுகதைப்போட்டி விருதுகள் (இரு முறை)
 • கவிதை உறவு அமைப்பின் கல்வியியல்-இளைஞர் நல நூலுக்கான முதல்விருது (முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே நூலுக்காக) [6]
 • கம்பன் தமிழும் கணினித்தமிழும் நூலுக்கான விருது (திருப்பூர் தமிழ்ச்சங்கம், 24ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா, திருப்பூர், 2016)

பேட்டிகள்[தொகு]

 • இணையத் தமிழால் இணைவோம் [7]

ஆதாரங்கள்[தொகு]

 1. "நா. முத்து நிலவனின் வளரும் கவிதை". விகடன் (2011). பார்த்த நாள் சூன் 10, 2014.
 2. 2.0 2.1 2.2 முத்துநிலவனும் முழுநிலாக்கோட்டையும், முத்துநிலவன் நேர்காணல், தமிழ் நெஞ்சம், மார்ச் 2018, பக்.21-25
 3. "நா. முத்துநிலவனின் பங்களிப்புகள்". malarum.com. பார்த்த நாள் சூலை 10, 2014.
 4. "முத்துநிலவன்". தினமணி. பார்த்த நாள் சூலை 10, 2014.
 5. புதிய மரபுகள்
 6. தினமணி, 20.3.2014
 7. புதிய புத்தகம் பேசுது, மலர் 13, இதழ் 10, டிசம்பர் 2015, பக்.46-49

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துநிலவன்&oldid=2942125" இருந்து மீள்விக்கப்பட்டது