முத்துகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துகன்
வாரிசு
எசு நதோவா
காரா ஹுலேகு
புரி
குடும்பம் போர்சிசின்
தந்தை சகதை கான்
பிறப்பு {வார்ப்புரு:Place of birth
இறப்பு பாமியான்

முத்துகன் என்பவர் சகதை கானின் மூத்த மகனாவார். அவர் வழியாக மங்கோலியப் பேரரசை நிறுவிய ககான் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். 1221 ஆம் ஆண்டு பாமியான் முற்றுகையின் போது முத்துகன் கொல்லப்பட்டார். இவரது மகன் எசு நதோவா. எசு நதோவா சகதை கானரசின் கான் ஆகிய பரக்கின் தந்தையாவார். 1266-1271 ஆகிய காலகட்டத்தில் மொகுலிசுதானின் கானாகப் பரக் பதவி வகித்தார்.[1][2]

சகதை கானரசுகளின் பரம்பரை[தொகு]

பாபர் தான் எழுதிய பாபர் நாமாவின் 19 வது பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் தனது தாய் வழி தாத்தா யூனஸ் கானின் பரம்பரையைப் பின்வருமாறு விளக்குகிறார்:

"யூனஸ் கான் சகதை கானின் வழித்தோன்றல், சகதை கான் செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் (பின்வருமாறு,) யூனஸ் கான், வயிஸ் கானின் மகன், வயிஸ் கான் ஷெர்-அலி அவுக்லோனின் மகன், ஷெர்-அலி அவுக்லோன் முகம்மத் கானின் மகன், முகம்மத் கான் கிசிர் கவாஜா கானின் மகன், கிசிர் கவாஜா கான் துக்லுக்-திமுர் கானின் மகன், துக்லுக்-திமுர் கான் ஐசன்-புகா கானின் மகன், ஐசன்-புகா கான் தவா கானின் மகன், தவா கான் பரக் கானின் மகன், பரக் கான் எசுந்தவா கானின் மகன், எசுந்தவா கான் முவத்துகனின் மகன், முவத்துகன் சகதை கானின் மகன், சகதை கான் செங்கிஸ் கானின் மகன்"[1]

மிர்சா முகம்மத் ஐதர் துக்லத்தின் கூற்றுப்படி அப்துல் கரிம் கானின் பரம்பரை
  1. செங்கிஸ் கான்
  2. சகதை கான்
  3. முத்துகன்
  4. எசு நதோவா
  5. கியாஸ்-உத்-தின் பரக்
  6. துவா
  7. முதலாம் எசென் புகா
  1. துக்லுக் திமுர்
  2. கிசிர் கோஜா
  3. முகம்மத் கான் (மொகுலிஸ்தானின் கான்)
  4. ஷிர் அலி கான்
  5. உவைஸ் கான் (வைசே கான்)
  6. யூனுஸ் கான்
  7. அஹ்மத் அலக்
  1. சுல்தான் சயித் கான்
  2. அப்துரஷித் கான்
  3. அப்துல் கரிம் கான் (யர்கந்து)

[2]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 The Babur Nama in English, Zahiru'd-din Mubammad Babur Padshah Ghdzt, Annette Susannah Beveridge
  2. 2.0 2.1 The Tarikh-i-Rashidi: a history of the Moghuls of central Asia by Mirza Muhammad Haidar Dughlat; Editor: N. Elias,Translated by Sir Edward Denison Ross,Publisher:S. Low, Marston and co., 1895
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துகன்&oldid=2976543" இருந்து மீள்விக்கப்பட்டது