உள்ளடக்கத்துக்குச் செல்

பாமியான் முற்றுகை (1221)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாமியான் முற்றுகை
குவாரசமியப் பேரரசின் மீதான மங்கோலியப் படையெடுப்பு பகுதி

ஷாஹர்-இ-கோல்கோலா கோட்டையின் இடிபாடுகள்
நாள் ஜூலை 1221
இடம் பாமியான்,குவாரசமியப் பேரரசு (நவீன ஹசராஜத், ஆப்கானித்தான்)
34°49′30″N 67°50′00″E / 34.82500°N 67.83333°E / 34.82500; 67.83333
மங்கோலியர்களின் வெற்றி
சண்டையிடுபவர்கள்
மங்கோலியப் பேரரசு குவாரசமியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
செங்கிஸ் கான் சலாலத்தீன் மிங்புர்னு
இழப்புகள்
பெருமளவு[1] அனைவரும் கொல்லப்பட்டனர்[2]

பாமியான் முற்றுகை (Siege of Bamyan) என்பது செங்கிஸ் கான் கி.பி 1221 களின் வசந்த காலத்தில் குவாரசமியா மீதான மங்கோலிய படையெடுப்பின் போது நடந்தது. மங்கோலியப் பேரரசின் ஆட்சியாளரான செங்கிஸ் கானின் தலைமையில் ஒரு இராணுவம், குவாரசமியப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான சுல்தான் சலாலத்தீன் மிங்புர்னுவைப் பின்தொடர்ந்து சென்றது. செங்கிஸ் கான் இந்து குஃசு மலையைக் கடந்து, அதன் பிறகு இன்றைய ஆப்கானித்தானில் காபுலின் வடமேற்கில் உள்ள பாமியான் அருகே உள்ள ஷாஹர்-இ-கோல்கோலா கோட்டையை முற்றுகையிட்டார். இந்த முற்றுகை ஒரு பேரழிவுகரமான தாக்குதலுக்கு வழிவகுத்தது. இதனால் நகரம் இடிந்து விழுந்தது.[3]

பின்புலம்

[தொகு]

ஆப்கானித்தானில் புதிதாக இராணுவத்தை சேர்த்துக் கொண்டிருந்த குவாரசமிய அரசமரபின் கடைசி ஆட்சியாளரான மிங்புர்னுவை மங்கோலியர்கள் துரத்தியபோது இந்த முற்றுகை நடைபெற்றது.[4]

முற்றுகை

[தொகு]

இந்த யுத்தத்தின் போது முற்றுகையிடப்பட்டிருந்த மதில் சுவற்றில் இருந்து வந்த அம்பு தாக்கி சகதை கானின் மகனும், செங்கிஸ் கானின் விருப்பத்திற்குரிய பேரனுமாகிய முத்துகன் கொல்லப்பட்டான்.[5][6][7] அவனது இறப்பு, இந்த முற்றுகையின் போது தனது இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் இறந்தது மற்றும் தானும் ஒரு நாள் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்தது ஆகியவை செங்கிஸ் கானைக் கோபப்பட வைத்தது. பாமியான் கைப்பற்றப்பட்ட பிறகு அந்த நகரை முழுவதுமாக அழித்து, அந்த நகர் மற்றும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களை மொத்தமாகக் கொல்லச் செங்கிஸ் கான் உத்தரவிட்டார். மங்கோலியர்கள் இந்நகரைக் "கவலைகளின் நகரம்" (அதாவது "துயர நகரம்") என்று அழைக்கும் அளவிற்கு அவர்கள் ஏற்படுத்திய அழிவானது முழுமையுடையதாக இருந்தது.[8][9] இந்த நகரின் மற்றொரு பெயரானது கொல்லப்பட்ட மக்களின் கூக்குரலைக் குறிக்கும் விதமாக "சத்த (அல்லது அலறல்) நகரம்" ஆகும்.[4] முற்றுகையிலிருந்து மற்றொரு பதிவு, ஜலால் அல்-தின் மங்புர்னியின் மகள் மங்கோலியர்களுக்கு அதன் ரகசிய நுழைவாயிலை வெளிப்படுத்துவதன் மூலம் நகரத்தை காட்டிக் கொடுத்ததாகக் கூறுகிறது.[10]

விளைவுகள்

[தொகு]

இந்த முற்றுகைக்குப் பிறகு செங்கிஸ் கான் இந்தியாவிற்கு தப்பி ஓடிய மிங்புர்னுவைத் துரத்தினார்.[11]

ஒரு பொதுவான நம்பிக்கை மற்றும் பெரும்பாலான கசாரா மக்களும் நம்புவது யாதெனில்,[12] உள்ளூர் ஆப்கானிய மக்கள் முழுவதுமாகக் கொல்லப்பட்ட பின்னர் இந்தப் பகுதியைப் பாதுகாக்கத் தனது மங்கோலிய வீரர்கள் மற்றும் அவர்களது அடிமைப் பெண்களை இப்பகுதியில் செங்கிஸ் கான் வாழ வைத்தார் என்பதாகும்.[13] அந்த மக்களே தற்போதைய கசாரா மக்களின் முன்னோர்கள் ஆவர். "கசாரா" என்ற சொல்லானது மங்கோலிய இராணுவப் பிரிவான 1,000 வீரர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பாரசீகச் சொல்லான "யக் கசர்" ("ஓர் ஆயிரம்") என்ற சொல்லிலிருந்து வந்திருப்பதற்கே பெரும்பாலான வாய்ப்புள்ளது.[14]

இன்று பாமியான் என்ற பண்டைய நகரம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.[15]பாமியான் இந்த நிகழ்விலிருந்து நீண்ட காலமாக மீள முடியவில்லை. பல தசாப்தங்களுக்குப் பிறகும், நகரம் இன்னும் பேரழிவிற்கு உள்ளாகியிருந்தது என்று ஒரு பாரசீக வரலாற்றாசிரியரின் அறிக்கை கூறுகிறது.[16]

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. ↑ Kohn, George C (2007). Dictionary of Wars. New York : Facts on File/Checkmark Books. p. 55.
  2. ↑ Sverdrup, Carl Fredrik (2017). The Mongol Conquests: The Military Operations of Genghis Khan and Sube'etei. p. 347. Retrieved 2025-04-23.
  3. ↑ "City of Screams: Gholghola". Visit Bamiyan. 4 June 2020. Retrieved 2025-02-04.
  4. 1 2 Dictionary of Wars, by George C. Kohn, p.55.
  5. ↑ Jack Weatherford (2005). Genghis Khan and the Making of the Modern World. Crown/Archetype. p. 117. ISBN 9780307237811.
  6. ↑ Brendan Cassar; Sara Noshadi (2015). Keeping history alive: safeguarding cultural heritage in post-conflict Afghanistan. UNESCO Publishing. p. 244. ISBN 9789231000645.
  7. ↑ Anwarul Haque Haqqi, Chingiz Khan: The Life and Legacy of an Empire Builder, (Primus Books, 2010), 152.
  8. ↑ "Remembering Bamiyan". Kashgar.com.au. Archived from the original on 4 அக்டோபர் 2013. Retrieved 9 அக்டோபர் 2013.
  9. ↑ Roux, Jean-Paul (2003). Genghis Khan and the Mongol Empire. New York : Harry N. Abrams. ISBN 0810991039. p. 124.
  10. ↑ "City of Screams: Gholghola". Visit Bamiyan. 4 June 2020. Retrieved 2025-02-04.
  11. ↑ Behnke, Alison (2008). The Conquests of Genghis Khan. Minneapolis : Twenty-First Century Books. ISBN 9780822575191. p. 107.
  12. ↑ James B. Minahan (10 Feb 2014). Ethnic Groups of North, East, and Central Asia: An Encyclopedia. ABC-CLIO. p. 99. ISBN 9781610690188. Many Hazara believe that their ancestors who entered the region as part of the armies of Genghis Khan in the 13th century were Mongol soldiers and their slave women who settled to garrison the highlands in central Afghanistan following the 1221 siege of the city of Bamiyan.
  13. ↑ James, Minahan (2007). Encyclopedia of the stateless nations : ethnic and national groups around the world. Westport, Conn. : Greenwood Press. p. 728.
  14. ↑ Ratchnevsky, Paul. Genghis Khan His Life and Legacy. Cambridge and Oxford U.K.: Blackwell, 1991, p.164.
  15. ↑ "Cultural Landscape and Archaeological Remains of the Bamiyan Valley". UNESCO World Heritage Centre. Archived from the original on 28 January 2007. Retrieved 2 August 2022.
  16. ↑ Foundation, Encyclopaedia Iranica. "Welcome to Encyclopaedia Iranica". iranicaonline.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமியான்_முற்றுகை_(1221)&oldid=4397057" இலிருந்து மீள்விக்கப்பட்டது