யூனுஸ் கான் (மன்னன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூனுஸ் கான் என்பவர் நடு ஆசியாவில் இருந்த மொகுலிசுதான் நாட்டின் கான் ஆவார். இவரது ஆட்சிக்காலம் 1462-1487 ஆகும். அவர் கால சீன பதிவுகளில் ஹாஜி அலி என்று குறிப்பிடப்பட்டுள்ள நபர் யூனுஸ் கான் தான் என பல வரலாற்றாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.[1][2] முகலாய பேரரசை தோற்றுவித்த பாபரின் தாய் வழி தாத்தா இந்த யூனுஸ் கான்.

யூனுஸ் கான் செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றல் ஆவார். இவர் செங்கிஸ் கானின் மகன் சகதை கானின் வழி வந்தவர் ஆவார்.

இவர் யாசுது நகரத்தில் கல்வி கற்றார். அவர் காலத்தில் மிகுந்த கல்வியறிவு உடைய மொகுலாயர்களில் ஒருவர் ஆனார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனுஸ்_கான்_(மன்னன்)&oldid=3344620" இலிருந்து மீள்விக்கப்பட்டது