முதலாம் இப்ராகிம் அதில் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் இப்ராகிம் அதில் ஷா புசுருக்
Sultan
அதில் சாகி அரசன்
ஆட்சி1534–1558
முன்னிருந்தவர்மல்லு அதில் ஷா
பின்வந்தவர்முதலாம் அலி அதில் ஷா
துணைவர்குச்ரு-உன்-நிசா -பேகம் (ஆசாத் கான லாரியின் மகள்)
இராபியா சுல்தானா (அலாதீன் இமாத் ஷாவின் மகள்]])
வாரிசு(கள்)
 • இசுமாயில்
 • முதலாம் அலி அதில் ஷா
 • தமாசுபி
 • அகமது
 • சானி பிபி (முதலாம் அலி பரித்தின் மனைவி)
 • அதியா சுல்தானா (முர்தாசா நிசாம் ஷாவின் மனைவி)
முழுப்பெயர்
சுல்தான் அபுல் நாசர் இப்ராகிம் அதில் ஷா
அரச குலம்அதில் சாகி பேரரசு
தந்தைஇசுமாயில் அதில் ஷா
தாய்பாத்திமா பீபி
பிறப்புபிஜாப்பூர்
இறப்பு1558
பிஜாப்பூர்
அடக்கம்1558
குல்பக்காவின் கோகியில் உள்ள புகழ்பெற்ற சூபி துறவி சந்தா உசைனி அச்ரபியின் கல்லறைக்கு அருகில் இப்ராகிம் அடக்கம் செய்யப்பட்டார்.
சமயம்சுன்னி இசுலாம்[1][2][3]

முதலாம் இப்ராகிம் அதில் ஷா ( Ibrahim Adil Shah I ; 1534-1558) ஓர் சுல்தானும் பின்னர் பிஜப்பூரின் ஷா என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் அடில் சாகி ஆட்சியாளரும் ஆவார். அபாக்கி பிரிவின் சூழ்ச்சியின் மூலம் தனது மூத்த சகோதரர் மல்லு அதில் ஷாவுக்குப் பிறகு பதவியேற்றார்.

நம்பிக்கை[தொகு]

பெரும்பாலான தக்காண முஸ்லிம்களின் மதமான சுன்னி இசுலாம்[4] மீது வலுவான ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பதவியேற்றதும், குத்பாவிலிருந்து பன்னிரண்டு சியா இமாம்களை நீக்கிவிட்டு, முந்தைய சியா நடைமுறைகளை நிறுத்திவிட்டு, சுன்னி இசுலாமிய நடைமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.[5] [6] [7] தனது முன்னோடிகளின் மரபுகளிலிருந்து விலகி, அரசியல் மற்றும் மதக் கொள்கைகளில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலான அபாகி பிரிவினரை (சில விதிவிலக்குகளுடன்) விலக்கி வைத்தார். மேலும் அவர்களுக்குப் பதிலாக தக்காண சுல்தானகத்துடன் ( மராட்டியர்கள் மற்றும் கபாக்சிகள் உட்பட) சேர்த்தார். நானூறு அபாக்கி துருப்புக்களை மட்டுமே தனது மெய்க்காப்பாளராகத் தக்க வைத்துக் கொண்டார். இதன் விளைவாக, இவர் சியா ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். சுன்னிகளை பதவியில் இருந்து நீக்கினார் [8] [9] பல மராத்தியர்கள் இவரது அரசவையில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தனர். மேலும், பொது கணக்குகள் மராத்தியில் பராமரிக்கத் தொடங்கின.

கொள்கைகள்[தொகு]

எவ்வாறாயினும், இப்ராகிமின் அபாக்கி எதிர்ப்பு கொள்கை காரணமாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அண்டை ஆட்சியாளர்களின் சேவையில் சேர்ந்ததால், இராச்சியம் கணிசமாக பலவீனமாகியது. இது ராச்சியத்தை தொடர்ச்சியான படையெடுப்புகளில் ஈடுபடுத்தியது . ஆயினும்கூட, இவரது இராஜதந்திர ஆலோசகராக செயல்பட்ட மூத்த அபாகி தலைவர் ஆசாத் கான் லாரி ( பெல்காமில் அடக்கம் செய்யப்பட்டவர்), நெருக்கடி நேரத்தில் ராச்சியத்தைக் காப்பாற்றினார்.

Reign[தொகு]

இருபத்தி நான்கு ஆண்டுகளே நீடித்த இப்ராகிமின் ஆட்சியானது, அகமத்நகர், பீதர், பெரார், கோல்கொண்டா மற்றும் விஜயநகரம் ஆகியவற்றுடன் அவ்வப்போது நட்புடனும் எதிராகவும் இருந்தது. தொடர்ச்சியான போர்கள் இருந்தபோதிலும், பிராந்திய விரிவாக்கம் செய்யப்படவில்லை. இவ்வாறு பீதரைக் கைப்பற்றியபோது, சோலாப்பூர் மற்றும் பசவகல்யாண் ஆகிய பகுதிகளை அகமதுநகர் ஆட்சியாளர்களிடம் இழந்தார். மறுபுறம், மேற்கு-கடற்கரையில் தெற்கில் கணிசமான கையகப்படுத்தல்கள் செய்யப்பட்டன. பிஜப்பூர் பிரதேசத்தின் தொலைதூர எல்லை அப்போது கோவாவின் தெற்கு வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், கோல்கொண்டா அடிபணியவில்லை என்றாலும், பீஜப்பூர் இராணுவம் கோல்கொண்டா கோட்டையின் சுவர்களை இடித்து வெற்றியுடன் திரும்பியது.

இறப்பு[தொகு]

கோகியில் உள்ள புகழ்பெற்ற சூபி துறவி சந்தா உசைனி அச்ரபியின் கல்லறைக்கு அருகில் இப்ராகிம் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு இவரது தந்தை இசுமாயில் மற்றும் தாத்தா யூசுப் ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். இவரது கல்லறையில் அல்லா, முகம்மது, ரசிதுன் கலீபாக்கள் மற்றும் பிற சகாபாக்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு உள்ளது. [10]

மேற்கோள்கள்[தொகு]

 1. Muhammad Qasim பெரிஷ்தா's Tarikh-e-Firishta.
 2. Busateenus-Salateen a Persian Manuscript of Mirza Ibrahim Zubairi.
 3. Mirza Ibrahim Zubairi, Rouzatul Auliya-e-Bijapur.
 4. Sultans of Deccan India, 1500–1700: Opulence and Fantasy. https://archive.org/details/sultansofdeccani1500haid. 
 5. The African Dispersal in the Deccan: From Medieval to Modern Times. 
 6. Three Ways to be Alien: Travails and Encounters in the Early Modern World. 
 7. A Social History of the Deccan, 1300-1761: Eight Indian Lives, Volume 1. 
 8. History of Medieval India: From 1000 A.D. to 1707 A.D.. 
 9. The African Diaspora in the Indian Ocean. 
 10. Farooqui Salma Ahmed (2011). A Comprehensive History of Medieval India: Twelfth to the Mid-Eighteenth Century. Pearson Education India. பக். 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131732021. 
 • Wakiyate Mamlakate Bijapur by Basheeruddin Dehelvi.
 • Tareekhe Farishta by Kasim Farishta
 • External Relation of Bijapur Adil Shahis.