உள்ளடக்கத்துக்குச் செல்

முட்டிச்சூர் கல்லட்டுப்புழா மகா சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயிலின் நுழைவாயில்

முட்டிச்சூர் கல்லட்டுப்புழா மகா சிவன் கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அந்திகாட்டில் அமைந்துள்ளது . [1] இந்தக்கோயில் கேரள கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கல்லட்டுப்புழா கோயில் கருவண்ணூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். மூலவர் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சிலையை பரசுராமர் நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2]

கோக சண்டேசம்

[தொகு]

சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்ற "கோக சண்டேசம்" என்ற கவிதையில் முட்டிச்சூர் மற்றும் சிவன் கோயில்லைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "108 Shiva temples of Kerala - Worshiped by Parasurama Information". www.vaikhari.org.
  2. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". www.templesinindiainfo.com.