முடியுருக் குருதிச்சுற்றோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முடியுருக் குருதிச்சுற்றோட்டம்
Gray492.png
இடப் பக்க முடியுரு நாடியின் வெளிப்பக்கத் தோற்றம்
Gray491.png
இதயத்தின் கீழ்ப் புறத் தோற்றம்
ம.பா.தலைப்பு Coronary+Vessels

முடியுருக் குருதிச்சுற்றோட்டம் (Coronary circulation) எனப்படுவது இதயத்திற்கு, குறிப்பாக இதயத்தசைக்கு குருதியை வழங்கும் மற்றும் இதயத்தசையில் இருந்து குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் குருதி செலுத்தப்படுவதைக் குறிக்கும். இதயத்தசைக்கு ஆக்சிசன் நிரம்பிய குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து ஆக்சிசன் அற்ற குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும்.

உடலின் ஏனைய பாகங்களில் உள்ள தமனிகள் பொதுவாக தமக்கிடையே பிணைப்பைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக காலுக்குச் செல்லும் பிரதான தமனியில் அடைப்பு ஏற்படின் அதற்கு மேலே உள்ள வேறொரு தமனி குருதியை எடுத்துச் செல்லும், இது இணை இரத்த ஒட்டம் எனப்படும். ஆனால் பெருந்தமனியில் இருந்து புறப்படும் முடியுருத்தமனிகள் மட்டுமே இதயத்துக்கு குருதியை வழங்குகின்றது, அதனால் இவை முடிவுற்ற சுற்றோட்டம் என்று அழைக்கப்படுகின்றது.

முடியுருத்தமனி[தொகு]

இடது, வலது என இரு முடியுருத்தமனிகள் பெருந்தமனி அடைப்பிதழுக்குச் சற்று மேலே பெருந்தமனியின் ஆரம்பப் பகுதியில் இருந்து புறப்படுகின்றது.