முக்தா கோட்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தா கோட்சே
2018இல் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் முக்தா கோட்சே
பிறப்புமுக்தா வீரா கோட்சே
26 சூலை 1986 (1986-07-26) (அகவை 37)
புனே, மகாராட்டிரம், இந்தியா
பணிவடிவழகி, நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை

முக்தா வீரா கோட்சே [1] ( Mugdha Veira Godse ) (பிறப்பு: ஜூலை 26, 1986) ஓர் இந்திய நடிகையும் மற்றும் வடிவழகியுமாவர். முன்னாள் வடிவழகியான முக்தா கோட்சே, 2004இல் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் அரையிறுதிப் போட்டியாளராக இருந்தார். மதுர் பண்டார்கரின் 2008 திரைப்படமான பேஷன் என்ற திரைப்படத்தில் இவர் நடிகையாக அறிமுகமானார். மராத்தி பால் பட்டே புதே என்ற மராத்தி உண்மைநிலை நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான தனி ஒருவன் படத்திலும் நடித்துள்ளார்.[2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

ஒரு அழகிப் போட்டியில் முக்தா கோட்சே

முக்தா கோட்சே 26 ஜூலை 1986 அன்று புனேவில் ஒரு சிறிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.[3] புனேவில் உள்ள நூதன் மராத்தி வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[4] பின்னர்,தனது இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை புனேவில் உள்ள மராத்வாடா மித்ரா மண்டல் வணிகக் கல்லூரியில் முடித்தார்.[5] இவரது ஆரம்ப நாட்களில், முக்தா எண்ணெய் விற்று ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே சம்பாதித்தார்.[6] பின்னர் இவர் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார். மேலும், உள்ளூர் அழகுப் போட்டிகளில் பங்கேற்றார். 2002 இல், இவர் கிளாட்ராக்ஸ் மெகா மாடல் ஹன்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வென்றார். 2004 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய வடிவழகிப் போட்டியான பெமினா மிஸ் இந்தியா என்பதில் முக்தா பங்கேற்றார்.அதில் இவர் அரையிறுதிக்கு வந்து மிஸ் பெர்பெக்ட் டென் பட்டத்தை வென்றார். பின்னர் மும்பை சென்று விளம்பரங்களில் தோன்றினார்.[6]

சாருக் கானுடன் சேர்ந்து பாரதி ஏர்டெல் லிமிடெட் விளம்பரம் மற்றும் குளோஸ்-அப் பற்பசை விளம்பரம் ஆகியவற்றிலும் தோன்றியுள்ளார். பத்திரிகை விளம்பரங்கள், இசைக் காணொளிகள், விளம்பரங்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நடையழகு நிகழ்சிகளில் நடப்பது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.[7] மதுர் பண்டார்கர் இயக்கியிருந்த ஃபேஷன் என்ற பாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோருடன் நடித்ருந்தார்.

சி லிமிட்டட் என்ற நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் ஆலண்டியா யோகர்ட் விளம்பரத்திலும் இவர் தோன்றினார்.[8] சந்தீப் மர்வாவா என்ற தொழிலதிபர் நடத்தி வரும் ஆசியத் திரைப்பட & தொலைக்காட்சி அகாதமியின் 8வது சர்வதேச திரைப்பட & தொலைக்காட்சி விருது சமீபத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

கோட்சே ஃபேஷன் (2008) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான அப்சரா விருதை வென்றார்.

2009 ஆம் ஆண்டில், ஆல் தி பெஸ்ட் மற்றும் ஜெயில் ஆகிய இரண்டு படங்களில் முக்தா கோட்சே தோன்றினார். பாபி தியோலுக்கு இணையாக நடித்த ஹெல்ப், 13 ஆகஸ்ட் 2010 அன்று வெளியிடப்பட்டது. கலி கலி சோர் ஹை திரைப்படம் பிப்ரவரி 2012 இல் வெளியானது. வில் யூ மெரி மீ? மார்ச் 2012 இல் வெளியிடப்பட்டது. பவர் கப்பிள் உண்மைநிலை நிகழ்ச்சியில் கோட்சே மற்றும் இவரது காதலன் ராகுல் தேவ் இருவரும் கலந்து கொண்டனர்.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MugdhaGodseOfficial". 16 April 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  2. "Mugdha Godse to pair with Arvind Swami". 16 January 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Mugdha-Godse-to-pair-with-Arvind-Swami/articleshow/46702319.cms. 
  3. "'ही' प्रसिद्ध अभिनेत्री एकेकाळी पेट्रोल पंपावर करायची काम". 26 July 2017. http://www.loksatta.com/manoranjan-news/mugdha-godse-was-working-on-petrol-pump-before-entering-in-bollywood-1518884/. 
  4. Shaheen Parkar (16 February 2016). "Mugdha: That used to be my hangout!". http://www.mid-day.com/entertainment/2010/feb/160210-Mugdha-Godse-Pune-German-Bakery-Blast.htm. 
  5. Patowari (31 August 2019). "Actress Mugdha Godse says that she is already married in her head". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/actress-mugdha-godse-says-that-she-is-already-married-in-her-head/articleshow/70922377.cms. 
  6. 6.0 6.1 Nithya Ramani (1 June 2009). "Life has been good after Fashion". பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  7. "Mugdha Godse Walked the Ramp for Satomi at India Runway Week". பிசினஸ் ஸ்டாண்டர்ட். ANI. 19 September 2016. https://www.business-standard.com/article/news-ani/mugdha-godse-walked-the-ramp-for-satomi-at-india-runway-week-116091900483_1.html. 
  8. "05 hollandia yoghurt 3flavs - YouTube". 23 February 2011. Archived from the original on 19 December 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  9. "Mugdha Godse-Rahul Dev in Power Couple". 16 October 2015.
  10. "Rahul Dev on 14-year age gap with Mugdha Godse: 'My parents had an age gap of 10 years too'" (in en). 9 March 2020. https://www.hindustantimes.com/bollywood/rahul-dev-on-14-year-age-gap-with-mugdha-godse-my-parents-had-an-age-gap-of-10-years-too/story-KoRbkEMiQF7HWInv1dRFyI.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தா_கோட்சே&oldid=3946612" இலிருந்து மீள்விக்கப்பட்டது