முகுந்த் வரதராஜன்
மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி (Mukund Varadarajan), இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரின் சோபியான்மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலான அசோகச் சக்கரம் விருது இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மேஜர் முகுந்த் வரதராஜன், 1983ம் ஆண்டு ஏப்ரல் 12, அன்று ஆர்.வரதராஜன் மற்றும் கீதாவுக்கு மகனாகப் பிறந்தார். இந்தியாவின் சென்னையில் வசித்து வந்த இவருக்கு ஸ்வேதா, நித்யா என்ற இரண்டு சகோதரிகள் இருந்தனர். முகுந்த் தனது நீண்டகால காதலி இந்தூ ரெபேக்கா வர்கீஸை, ஆகஸ்ட் 28, 2009 அன்று திருமணம் செய்தார். [1] இவர்களுக்கு அஸ்ரேயா என்ற ஒரு மகள் மார்ச் 17, 2011 இல் பிறந்தார். [2] இவர் தனது, இளங்கலை வணிகவியல் பட்டத்தை காஞ்சிபுரம், ஏனத்தூரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் பெற்றார். மேலும், தாம்பரத்திலுள்ள, சென்னை கிரிஸ்துவக் கல்லூரியில், இதழியலில் ஒரு பட்டயப் படிப்பு முடித்தார். அவரது தாத்தா மற்றும் அவரது இரண்டு மாமாக்களும் இராணுவத்தில் பணியாற்றினர். இது முகுந்த் வரதராஜனைப் இராணுவத்தில் சேரத் தூண்டியது.
முந்தைய சேவை
[தொகு]முகுந்த் வரதராஜன், அதிகாரிகள் பயிற்சி அகாதமியின் முன்னாள் மாணவராக இருந்தார். பட்டம் பெற்ற பிறகு, 2006 ஆம் ஆண்டில் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் (22 ராஜ்புத்) லெப்டினெண்டாக நியமிக்கப்பட்டார். அவர் மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில் உள்ள காலாட்படை பள்ளியில் பணியாற்றினார். மேலும், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியாக இருந்தார். [3] டிசம்பர் 2012 இல், அவர் ராஷ்டிரிய ரைஃபிள்ஸின் 44 வது பட்டாலியனுக்கு நியமிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்டார்.
வீரமரணம்
[தொகு]ஏப்ரல் 25, 2014 அன்று, பயங்கரவாதிகளின் கிராமத்தை அகற்ற பயங்கரவாத எதிர்ப்பு தேடல் நடவடிக்கைக்கு முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார். இந்த தாக்குதலின் போது, இவரது குழு குண்டு தாக்குதலில் தீக்கிரையானது. ஆனாலும், அதிகாரியான இவர், விரைவாக செயல்பட்டு, 24 மணி நேரத்திற்கு முன்னர் தேர்தல் அதிகாரிகளைக் கொன்றதற்கு காரணமான தீவீரவாதி ஹிஸ்புல் முஜாஹிதீனின் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றார். இருப்பினும், தாக்குதலின் போது இவர் படுகாயமடைந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இவர் இறந்தார். [4] [5] [6]
இந்த நடவடிக்கையின் போது, இவர் செய்த துணிச்சலான செயல்களுக்காக, "கடமையின் அழைப்புக்கு அப்பாற்பட்ட வீரம் காட்டியதற்காக, 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலான விருதான அசோக சக்கரம் விருது, இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. [4] "இந்த நடவடிக்கையின் போது, தியாகத்தை அடைவதற்கு முன்பு, மேஜர் முகுந்த் முன்மாதிரியான தலைமைத்துவ திறன்கள், மூல தைரியம், திட்டமிடல் மற்றும் விரைவான நடவடிக்கை ஆகியவற்றைக் காட்டினார், இது மூன்று உயர்மட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை ஒழிப்பதில் உச்சக்கட்டத்தை அடைந்தது." என்று இந்திய அரசு விருது வழங்கும்போது மேற்கோள் காட்டியது. முகுந்த் வரதராஜன், தமிழக மாநிலத்தில், அசோக சக்கரம் விருது பெற்ற நான்காவது நபராக குறிப்பிடப்படுகிறார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "'India Should See The Man Mukund Was, Not My Sorrow': Martyr's Wife to NDTV". NDTV. பார்க்கப்பட்ட நாள் 31 January 2015.
- ↑ "Major Mukund Varadarajan cremated with full military honours in Chennai". http://timesofindia.indiatimes.com/india/Major-Mukund-Varadarajan-cremated-with-full-military-honours-in-Chennai/articleshow/34347210.cms. பார்த்த நாள்: 16 August 2014.
- ↑ "Tambaram mourns a braveheart". The Hindu. 27 April 2014. http://www.thehindu.com/news/cities/chennai/tambaram-mourns-a-braveheart/article5951633.ece. பார்த்த நாள்: 16 August 2014.
- ↑ 4.0 4.1 "For Gallantry". பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.
- ↑ "Major Mukund Varadarajan Awarded Ashok Chakra, the Highest Gallantry Award". http://www.ndtv.com/article/india/major-mukund-varadarajan-awarded-ashok-chakra-the-highest-gallantry-award-576105. பார்த்த நாள்: 16 August 2014.
- ↑ "Independence Day Gallantry Awards and Other Decorations". http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=108722. பார்த்த நாள்: 16 August 2014.