முகம்மது சாய்பானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மது சாய்பானி கான் (Muhammad Shaybani Khan) (அண். 1451 - 2 திசம்பர் 1510) என்பவர் ஓர் உசுப்பெக்கிய தலைவர் ஆவார். இவரது இயற்பெயர் "சிபக்" ஆகும் இதன் பொருள் "மருக்கொழுந்து" அல்லது "எரிமலைக் குழம்பால் உருவான கண்ணாடி" ஆகும். இவர் பல்வேறு உசுப்பெக்கிய பழங்குடியினங்களை ஒன்றிணைத்து திரான்சாக்சியானாவில் அவர்களின் முன்னேற்றத்திற்கான அடித்தளத்தையும், புகாரா கானரசின் நிறுவுதலுக்குமான அடித்தளத்தையும் அமைத்தார். செங்கிஸ் கானின் மூத்த மகன் சூச்சியின் ஐந்தாம் மகன் சிபனின் நேரடி வழித்தோன்றல் ஆவார். இதனால் இவர் சாய்பானி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஷா புதக்கின் மகன் ஆவார். இவ்வாறாக உசுப்பெக்கிய படையெடுப்பாளர் அபுல் கய்ர் கானின் பேரனாக இவர் திகழ்கிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland". 33. (1880). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_சாய்பானி&oldid=3775432" இலிருந்து மீள்விக்கப்பட்டது