மீன்களின் பட்டியல்
மீன்களின் பட்டியல் (Catalog of Fishes) என்பது ஒரு விரிவான இணையத் தரவுத்தளம் மற்றும் மீன் சிற்றினங்கள் மற்றும் பேரினங்களின் விலங்கியல் பெயர்கள் பற்றிய தொகுப்பு ஆகும். இது இதன் நோக்கத்தில் உலகளாவியது. இதனை கலிபோர்னியா அறிவியல் அகாதமி நிர்வகித்து நடத்துகிறது. இந்த மீன் பட்டியல் சேகரிப்பின் பொறுப்பாளரான வில்லியம் எஸ்க்மேயர் உள்ளார். இவர் இதனைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறார்.
மீன்களின் பட்டியலினால் பராமரிக்கப்படும் வகைப்பாட்டியல் அதிகாரப்பூர்வமாகக் கருதப்படுகிறது. மேலும் இது பரந்த உலகளாவிய மீன் தரவுத்தளமான பிஷ்பேஸ் மூலம் ஒரு அடிப்படைக் குறிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][2] இது அனைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரலகுகளுக்கான பட்டியலின் தகவல்களின் குறுக்கு-குறிப்புகளை உள்ளடக்கியது. 2015 அன்று, தேடக்கூடிய அட்டவணையில் சுமார் 58,300 மீன் சிற்றினங்களின் பெயர்கள் உள்ளன. இவற்றில் சுமார் 33,400 சிற்றினங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன (செல்லுபடியாகும்). மேலும் சில 10,600 பேரினங்களும் (5,100 செல்லுபடியாகும்) அடங்கும்.[3] எந்தவொரு சிற்றினத்தின் பெயருக்கும் கொடுக்கப்பட்ட தகவல் பொதுவாக அசல் விளக்கம், வகை மாதிரி, வகைப்பாட்டியல் ஆய்வுக் கட்டுரையில் பெயரின் பயன்பாடு பற்றிய குறிப்புகள், பெயரின் தற்போதைய நிலை மற்றும் வகைப்பாட்டின் சரியான பெயர் பற்றிய அறிக்கை மற்றும் சிற்றினம் சார்ந்த குடும்பம் குறித்தும் தகவல் உள்ளது.
1998-ல் அச்சிடப்பட்ட 3000-பக்க மூன்று தொகுதி மற்றும் மென்தட்டு பதிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் 1990-ல் சமீபத்திய மீன் வகைகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.[4]
இந்த பட்டியல் 2019-ல் எசிமெய்யர் மீன் பட்டியல் என மறுபெயரிடப்பட்டது, இப்போது உரோனால் பிரிக், ரிச்சர்ட் வான் டெர் லான் மற்றும் வில்லியம் என். எசிமெய்யர் ஆகியோரால் திருத்தப்பட்டது. இது இணையவழி அணுகலில் கிடைக்கிறது. இத்தளம் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்.
மேலும் பார்க்கவும்
[தொகு]- மீன் தளம்
- WoRMS
- உலகில் உள்ள மீன்கள்
- விலங்கியல் பெயரிடலின் சர்வதேச குறியீடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ FishBase Catalogue of Life, ITIS: Integrated Taxonomic Information System (15 Feb 2015)
- ↑ Bailly, N. (2010) Why there may be discrepancies in the assessment of scientific names between the Catalog of Fishes and FishBase FishBase
- ↑ Eschmeyer WN, Fong JD (2015) Species by family/subfamily in the Catalog of Fishes California Academy of Sciences (15 Feb 2015)
- ↑ Rainer Froese: Eschmeyer’s Catalog of Fishes FishBase (15 Feb 2015)
ஆதாரம்
[தொகு]- Eschmeyer, WN கேடலாக் ஆஃப் ஃபிஷ்ஸ் ஆன்லைன் டேட்டாபேஸ்
- Eschmeyer, WN (ed.) 1998. மீன்களின் பட்டியல். சிறப்பு வெளியீடு, கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸ், சான் பிரான்சிஸ்கோ. 3 தொகுதிகள் 2905 பக்.
- Eschmeyer, WN 1990. சமீபத்திய மீன் வகைகளின் பட்டியல். கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸ், சான் பிரான்சிஸ்கோ. 697 பக்.