மீனாட்சி சீனிவாசன்
மீனாட்சி சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா | 11 சூன் 1971
தேசியம் | இந்தியாn |
பணி | நடனம், கட்டடக் கலைஞர் |
வலைத்தளம் | |
http://www.meenakshisrinivasan.com |
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Srinivasan Bharatanatyam performance in Thiruvananthapuram, Asianetnews, 2 Oct 2017 | |
Soorya Festival 2016 : Meenakshi Srinivasan's Bharatanatyam, Asianetnews, 5 Oct 2016 | |
Meenakshi Srinivasan Bharatantyam, Divinity Series, 31 January 2014 |
மீனாட்சி சீனிவாசன் (Meenakshi Srinivasan) (பிறப்பு:1971 சூன் 11) இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் நடன இயக்குநரும், மற்றும் பரதநாட்டியத்தின் பந்தநல்லூர் பாணியின் நிபுணருமாவார்.[1] இவர் அலர்மேல் வள்ளியின் கீழ் பயிற்சி நடனப் பயிற்சியினைப் பெற்றவர். இந்த பாரம்பரிய பாணியில் இளைய தலைமுறை நடனக் கலைஞர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய தனி நடனக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2]
சென்னை மியூசிக் அகாதெமியின் வருடாந்த சர்வதேச நடன விழா, சிங்கப்பூர், இந்திய நுண்கலை அமைப்பின் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன விழா மற்றும் பாரிசில் உள்ள குய்மெட் அருங்காட்சியகம் போன்றவற்றிலும் இவர் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் 2011ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியிடமிருந்து உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
கூடுதலாக, மீனாட்சி சீனிவாசன் ஒரு தொழில்முறை கட்டிடக் கலைஞராவார். இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, சென்னையில் கால்ம் ஸ்டுடியோ [3] என்ற நிறுவனத்தை நிறுவி கட்டடக்கலை பயிற்சியை நடத்தி வருகிறார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி
[தொகு]மீனாட்சி 1971 சூன் 11 அன்று சென்னையில் பிறந்தார்.[4] மீனாட்சி சீனிவாசன் கலாசேத்திரா வெங்கடச்சலபதியின் கீழ் பரதநாட்டியத்தில் தனது முதல் பயிற்சியை பெற்றார். பின்னர் அலர்மேல் வள்ளியின் கீழ் பயிற்சிப் பெற்றார்.[5] கட்டடக்கலை நிபுணராக திகழும் இவர் சிங்கப்பூரில் கட்டடக்கலை தொடர்பான பணிகளிலும் ஈடுபடுபவராவார். அங்கிருக்கும் சிங்கப்பூர் இந்தியன் நுண்கலை சங்கத்தில் நடனக் கலைஞர் கிரீஷ்குமாரிடம் நடனக் கலையின் பல நுணுக்கங்களில் நிபுணத்துவம் பெற்றார்.[6]
தொழில் மற்றும் குறிப்பிடத்தக்க செயல்திறன்
[தொகு]சென்னை மியூசிக் அகாதமி, பிரம்ம கானசபா,[7] கிருட்டிண கான சபை போன்ற தென்னிந்தியாவின் முக்கியமான இசை சபாக்களில் இவர் இடம்பெற்றுள்ளார்.[8] மார்கழி விழாவிலும் நிகழ்த்தியுள்ளார்..
பெங்களூர் ஹப்பா உட்பட நாட்டின் பிற பகுதிகளில் நடன விழாக்களில் நடித்துள்ளார்.[7] நாதம் விழா,[4] பரிக்கிரம விழா,[9] சில்பாராமன் நடன விழா, கொல்கத்தா, டோவர் லேன் இசை மாநாடு, தேவதாசி விழா, சூர்ய விழா,[10] சுவராலயா விழா [11] மற்றும் நிசாகந்தி விழா போன்றவை.
சர்வதேச அளவில் இவர் சிங்கப்பூரில் உள்ள எஸ்ப்ளேனேட் - அரங்கங்களில் உள்ள இந்திய நுண்கலை அமைப்பின் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன விழாவில் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் ரெபர்ட்டரி அரங்கம் ;[12] மலேசியா, ராம்லி இப்ராகிமின் சூத்ர நடன திரையரங்கு, கனடாவின், வான்கூவரில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்ச்சி, இங்கிலாந்தின் இலண்டனில் நடைபெற்ற "யங் மாஸ்டர்ஸ்" விழா, பிரான்சின் பாரிசில் குய்மெட் அருங்காட்சியகம் மற்றும் ஒல்லாந்து மற்றும் பெல்ஜியத்திலும் இவர் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
விருதுகள்
[தொகு]இவரது பணியைப் பாராட்டி பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். இவரது ஆற்றல் மற்றும் உள் சக்தி மற்றும் இவரது " நிருத்தா (தூய நடனம்), நிருத்யா (வெளிப்படையான நடனம்) மற்றும் நாட்டியா (நாடகம்) " அளவிடப்பட்ட புத்திசாலித்தனம் "ஆகியவற்றால் இவர் பாராட்டப்பட்டார். இவருக்கு நாட்டிய கலா விபான்ச்சி ,(2007) நாட்டிய கால தர்சினி (2012) மற்றும் நிருத்ய அபினய சுந்தரம் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.[13]
மீனாட்சி சீனிவாசனுக்கு பரதநாட்டியத் துறையில் குறிப்பிடத்தக்க திறமைக்காக 2011ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமியான சங்கீத நாடக அகாதமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Menon, Anasuya (21 July 2013). "Seamless Grace". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/dance/seamless-grace/article4935238.ece. பார்த்த நாள்: 24 July 2019.
- ↑ Sai, Veejay (8 January 2017). "Meet the next gen Indian artistes keeping Bharatnatyam alive and flourishing". The News Minute. https://www.thenewsminute.com/article/meet-next-gen-indian-artistes-keeping-bharatnatyam-alive-and-flourishing-55415. பார்த்த நாள்: 24 July 2019.
- ↑ http://www.calmstudio.com
- ↑ 4.0 4.1 4.2 "Meenakshi Srinivasan". Sangeet Natak Akademi. Archived from the original on 10 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
- ↑ Seshan, A. (29 October 2009). "Meenakshi's magnificent Margam". Narthaki: Your gateway to the world of Indian Dance. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
- ↑ "மியூசிக் அகாடமி நாட்டிய விழா: நிருத்திய கலாநிதிகளும் சிலரின் நிருத்தங்களும்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
- ↑ 7.0 7.1 "Performances - 2000-2012". Meenakshi Srinivasan. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
- ↑ "Upcoming Performances". Meenakshi Srinivasan. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
- ↑ Kantawala, Zainab (27 Oct 2017). "A celebration of dance". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/a-celebration-of-dance/articleshow/61267076.cms. பார்த்த நாள்: 24 July 2019.
- ↑ "111-day Surya festival begins today". The Times of India. 20 September 2017. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/111-day-surya-festival-begins-today/articleshow/60770870.cms. பார்த்த நாள்: 24 July 2019.
- ↑ Ajayan, T. R. (1 October 2013). "Swaralaya Festival of Music and Dance; Kerala". KutcheriBuzz. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
- ↑ "Meenakshi Srinivasan". Shruti: India's Premier Magazine for the Performing Arts. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
- ↑ "Meenakshi Srinivasan". THARANG UTSAV. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.