மீனாட்சி சித்தரஞ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சி சித்தரஞ்சன்
பிறப்புசென்னை
படித்த இடங்கள்

மீனாட்சி சித்தரஞ்சன் (Meenakshi Chitharanjan) இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும், ஆசிரியரும், நடன இயக்குனருமாவார். இவர், பரதநாட்டியத்தின் பாரம்பரிய நடன வடிவத்தின் பந்தநல்லூர் பாணியின் நிபுணர் என அறியப்படுகிறார். [1] பரதநாட்டியத்தை ஊக்குவிக்கும் மற்றும் பந்தநல்லூர் பாரம்பரியத்தை பாதுகாக்க பாடுபடும் கலாடிக்சா என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். சொக்கலிங்கம் பிள்ளை மற்றும் சுப்பராய பிள்ளை ஆகியோரின் தந்தை-மகன் இரட்டையரின் சீடர் ஆவார். [2] இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவின் நாட்டிய கலா சாரதி உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றவர். [3] பாரம்பரிய பரதநாட்டிய நடனத்தில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2008 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்கிற நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதினை இந்திய அரசு அவருக்கு வழங்கியது. [4]

சுயசரிதை[தொகு]

இளமைப்பருவம்[தொகு]

மீனாட்சி சித்தரஞ்சன் தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்தார். இவர் தனது பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளில் ஒரே பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை, சபாநாகயம், ஒரு அரசாங்க அதிகாரி ஆவார். [3] இவரது தாயார் சாவித்ரி, இவர், நான்கு வயதாக இருந்தபோது, புகழ்பெற்ற பரதநாட்டிய குருவான பாண்டநல்லூர் சொக்கலிங்கம் பிள்ளையிடம் அனுப்பினார்; சொக்கலிங்கம் பிள்ளை மற்றும் அவரது மகன் சுப்பராய பிள்ளை ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்ற பின்னர், 1966 ஆம் ஆண்டில் தனது ஒன்பதாவது வயதில் அரங்கேற்றத்தை (அறிமுக) நடத்தினார். [1]

விரைவில், இவரது தந்தை இந்திய தலைநகருக்கு மாற்றப்பட்டபோது இவர் தில்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் விடுமுறை நாட்களில் சென்னைக்கு வருகை தந்து சுப்பராய பிள்ளை கீழ் நடனப் படிப்பைத் தொடர்ந்தார். இவர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார். பல் மருத்துவர் மற்றும் அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்.பக்தவத்சலத்தின் பேரனான அருண் சித்தரஞ்சனை மணந்தார், அதன் பிறகு இவரது நடன வாழ்க்கை சிறிது காலம் நிறுத்தப்பட்டது.

இவர், தனது இளம் வயதில் மிருதங்கம் வாசித்த மிருதங்க வித்வான் சீனிவாச பிள்ளை என்பவரின் சந்திப்பிற்குப் பிறகு இவர் நடனத்திற்குத் திரும்பினார். [3] பத்ம பூசண் விருது பெற்றவரும், மேடையில் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து செய்பவரான .கலாநிதி நாராயணனிடம் அபிநய பயிற்சி பெற்றார். [5] [6] சீனிவாச பிள்ளை, எஸ்.பாண்டியன் மற்றும் பத்மா சுப்ரமண்யம் ஆகியோரும் பல்வேறு காலங்களில் இவருக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

நடனப் பள்ளி[தொகு]

1991 ஆம் ஆண்டில், பரதநாட்டியம் கற்பிப்பதற்கான நடனப் பள்ளியான கலாடிக்சாவைத் தொடங்கினார், இது ஒரு நேரத்தில் சுமார் 100 மாணவர்களைப் பயிற்றுவிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது, மேலும் பாண்டநல்லூர் பாணியைப் பாதுகாக்க பாடுபடுவதாக அறியப்படுகிறது. [1] இவர் பல ஆர்வமுள்ள நடனக் கலைஞர்களைப் பயிற்றுவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் கலைமாமணி விருது பெற்ற தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ஆர். தனுஷ் இவரது சீடர்களில் ஒருவர் ஆவார். [7]

விருதுகள்[தொகு]

இவர் ஸ்ரீ கிருஷ்ண கானசபாவின் நாட்டிய சூடாமணி என்ற பட்டத்தையும் 1975 இல் தமிழக அரசின் கலைமணி விருதையும் பெற்றார். [8] 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீயின் நான்காவது மிக உயர்ந்த சிவில் கௌரவத்தையும் ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா 2014 ஆம் ஆண்டில் நாட்டிய கலா சாரதி என்ற பட்டத்தையும் வழங்கியது. [9] ரோட்டரி கிளப், சென்னா மற்றும் புரோபஸ் கிளப், சென்னை, மற்றும் மெட்ராஸ் மியூசிக் அகாதமியின் சிறந்த நடன விருது (2004) ஆகியவற்றிலிருந்து சிறந்த விருதுகளையும் பெற்றவர் ஆவார். இவர் தூர்தர்ஷனில் மிக உயர்ந்த கலைஞர் தரத்தைப் பெற்றவர்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Profile: Meenakshi Chitharanjan". Lokvani. 17 March 2009. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  2. "The king was captivated and…". The Hindu. 31 October 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  3. 3.0 3.1 3.2 "Life's dancing lessons". The Hindu. 13 February 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  5. "Memorable Guru Samarpan". Narthaki. 16 November 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  6. "Moves and music". The Hindu. 21 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  7. "KALAIMAMANI 2009 ANNOUNCED". Sangeethas. 2009. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  8. "Appreciated for taking Pandanallur style of dancing to Great Heights". Chennai Plus. 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  9. "Title conferred on Meenakshi Chitharanjan". The Hindu. 21 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Bharatanatyam Pushpanjali". YouTube video. Julia Pop. 21 October 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_சித்தரஞ்சன்&oldid=2957565" இலிருந்து மீள்விக்கப்பட்டது