உள்ளடக்கத்துக்குச் செல்

மீகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீகோ
விருத்தியாளர் இண்டல் நிறுவனம், லினக்ஸ் அறக்கட்டளை, நோக்கியா, மீகோ உருவாக்குனர் சமூகம்
Programmed in சி++
இயங்குதளக்
குடும்பம்
லினக்ஸ்
முதல் வெளியீடு 26 மே 2010 (2010-05-26)
வலைத்தளம் http://meego.com/

மீகோ என்பது ஒரு திறமூல செல்பேசி இயங்குதளத் திட்டம். இது லினக்ஸை அடிப்படையாகக் கொண்டது.[1]

நோக்கியா மற்றும் இன்டல் நிறுவனங்கள் பிப்ரவரி 2010இல் மொபைல் வேர்ட் காங்கிரஸ் என்னும் தொழில் நுட்ப மாநாட்டில் இத்திட்டதை அறிவித்தன.

இன்டல் நிறுவணத்தின் மொப்லின் இயங்குதளத் திட்டத்தையும், நோக்கியா நிறுவனத்தின் மேமோ திட்டத்தையும் ஒருங்கிணைத்து இந்த மீகோ திட்டம் உருவாக்கபட்டது. இத்திட்டத்தின் கோப்புகளனைத்தும் லினக்ஸ் அறக்கட்டளை (லினக்ஸ் ஃபவுண்டேசன்) வலைத்தளத்தில் பராமரிக்கப்படுகிறுது.[2]

இத்திட்டம் உருவாக இன்னொரு காரணமாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தில், இன்டல் நிறுவணத்தின் ஆட்டம் புரோசசர்களுக்கு போதிய ஆதரவு வழங்காதது என்று இன்டல் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Grabham, Dan (2010-02-15). "Intel and Nokia merge Moblin and Maemo to form MeeGo". techradar.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2010.
  2. http://meego.com/about/faq பரணிடப்பட்டது 2012-04-10 at the வந்தவழி இயந்திரம், மீகோ வலைத்தளத்திலுள்ள தகவல் பக்கம். 29 மே 2010 அன்று அணுகப்பட்டது
  3. "Intel: MeeGo exists because Microsoft let us down". TechRadar. 20 April 2010. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீகோ&oldid=3484422" இலிருந்து மீள்விக்கப்பட்டது