உள்ளடக்கத்துக்குச் செல்

மிண்டோரோ கொண்டைக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிண்டோரோ கொண்டைக்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைக்னோனோடிடே
பேரினம்:
கைப்சிபெட்சு
இனம்:
கை. மைண்டோரென்சிசு
இருசொற் பெயரீடு
கைப்சிபெட்சு மைண்டோரென்சிசு
இசுடீரி, 1890
வேறு பெயர்கள்
  • கைப்சிபெட்சு பிலிப்பீனசு மைண்டோரென்சிசு
  • அயோல் மைண்டோரென்சிசு
  • இக்சாசு மைண்டோரென்சிசு
  • இக்சாசு பிலிப்பீனசு மைண்டோரென்சிசு

மிண்டோரோ கொண்டைக்குருவி (Mindoro bulbul)(கைப்சிபெட்சு மைண்டோரென்சிசு) என்பது கொண்டைக்குருவி குடும்பமான பைக்னோனோடிடேயில் உள்ள ஒரு பாடும் பறவை சிற்றினமாகும் .

இது பிலிப்பீன்சில் உள்ள மின்டோரோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

மிண்டோரோ கொண்டைக்குருவி முதலில் ஐயோல் பேரினத்தின் கீழ் விவரிக்கப்பட்டது. பின்னர் சில வகைப்பாட்டியல் அதிகாரிகளால் இக்சோசு பேரினத்தில் ஒரு தனி சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2010 வரை, இது பிலிப்பீன்சு கொண்டைக்குருவியின் துணையினமாகக் கருதப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Species Version 2 « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
  2. Oliveros, Carl H.; Moyle, Robert G. (2010). "Origin and diversification of Philippine bulbuls". Molecular Phylogenetics and Evolution 54 (3): 822–832. doi:10.1016/j.ympev.2009.12.001. பப்மெட்:19995611.