மா. சின்னு
Appearance
மா.சின்னு (ma.chinnu ) என்பவா் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சோ்ந்த தமிழறிஞா் ஆவாா். 1932 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் மாவட்டம் தா.பழூர் என்ற கிராமத்தில் மாரிமுத்து அலமேலு இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் உயர்கல்வியை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் படித்து முடித்தார். புதுக்கோட்டை குலபதி பாலையா நடுநிலைப் பள்ளியில் பணியாற்றினார். தனது 91 வயதிலும் இவர் புத்தகங்கள் வாசித்தல், எழுதுதல், இலக்கியம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.[1]