மாவட்ட கால்நடை பண்ணை, செட்டிநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாவட்ட கால்நடை பண்ணை, செட்டிநாடு என்பது தமிழ்நாடின், சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும். இந்தப் பண்ணையானது 1957ஆம் ஆண்டு 1,907.32 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது.[1] இதில் 300 ஏக்கரில் மானாவாரி ஆராய்ச்சி நிலையம், 30 ஏக்கரில் தேசிய திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு இயங்கிவருகின்றன. மீதமுள்ள இடமானது கால்நடைப் பண்ணைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[2] இப்பண்ணையில், ஜெர்சி கலப்பினம், தார்பார்கர் மாடு போன்ற மாட்டினங்களும், இராமநாதபுரம் வெள்ளை செம்மறியாடுகள், ஜமுனாபாரி வெள்ளாடுகள், லார்ஜ் ஒயிட் யார்க்‌ஷயர் பன்றி இனம் ஆகியவை வளர்க்கப்படுகின்றன.[3] இங்கு வளர்க்கப்படும் இந்த கால்நடைகளின் கன்றுகள் அரசு நிர்ணயித்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறன்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசு கால்நடைப் பண்ணைகளில் தார்பார்கர் மாடுகள் பண்ணையில் மட்டுமே உள்ளதால், அவை இங்கு மட்டுமே கிடைக்கின்றன.


மேற்கோள்கள்[தொகு]

  1. சுப. ஜனநாயகச்செல்வம் (2015 சூலை 8). "செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணையில் ராஜஸ்தான் தார்பார்கர் இன பசுமாடுகள்: விவசாயிகள் வரவேற்பு". செய்தி. இந்து தமிழ். பார்த்த நாள் 9 மே 2019.
  2. "செட்டிநாடு கால்நடை பண்ணை மருத்துவ கல்லூரியாக மாறுமா? புல் வளர்ப்பு கூடமாகவே தொடரும் அவலம்". செய்திக் கட்டுரை. தின மலர் (2015 ஆகத்து 7). பார்த்த நாள் 9 மே 2019.
  3. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010". கால்நடை பராமரிப்புத் துறை. பார்த்த நாள் 8 மே 2019.