இராமநாதபுரம் வெள்ளை ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமநாதபுரம் வெள்ளை ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும்.[1] இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றன.

விளக்கம்[தொகு]

இவை நடுத்தர உடலமைப்பைக் கொண்டவை, பெரும்பாலும் வெள்ளை நிறத்திலிருந்தாலும் சில ஆடுகளில் உடல் முழுவதும் கருமைநிறப் பட்டைகளொடு காணப்படும். கிடாவுக்கு முறுக்கிய வளைந்த கொம்புகள் உண்டு, பெட்டைக்கு கொம்புகள் கிடையாது. கால்கள் சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும். வளர்ந்த கிடா 31 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 23 கி.கி எடையுடனும் இருக்கும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "செம்மறியாட்டு இனங்கள்". அறிமுகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் இணையதளம். பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.
  2. "செம்மறியாட்டினங்கள்". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.