ஜமுனாபாரி ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜமுனாபாரி ஆடு என்பது இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட ஓர் ஆட்டினம். இந்த ஆடு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. 1953-ஆம் ஆண்டு முதல் இந்தோனோசியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆட்டின் பெயர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜமுனா பார் என்று ஆற்றின் பெயரிலிருந்து உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது.

விளக்கம்[தொகு]

பொதுவாக ஜமுனாபாரி ஆடுகள் வெண்மை நிறத்திலும் கழுத்து, தலைப்பகுதிகளில் பழுப்பாகவும் இருக்கும். இவற்றின் மூக்கு கிளி போல் வளைந்திருக்கும். காதுகள் நீளமாகவும் தொங்கிக்கொண்டும் இருக்கும். இந்த இன ஆடுகள் உயரமாகவும், பெரிய உடலமைப்பையும், இந்திய இன ஆடுகளிலேயே நீண்ட கால்களையும் கொண்டது. இவற்றின் கொம்புகள் குட்டையாகவும், தட்டையாகவும் பின்னோக்கி முறுக்கியும் காணப்படும். தொடைப் பகுதியில் நீண்ட முடிக்கற்றைகள் காணப்படும். வளர்ந்த கிடா 90-100 செ.மீ உயரமும் 65-80 கி.கி எடையுடனும், பெட்டை 70-80 செ.மீ உயரமும் 45-60 கி.கி எடையுடனும் இருக்கும். பொதுவாக பெட்டை ஆடுகள் 20-25 மாத வயதில் முதல் குட்டி ஈனும், பிறந்த குட்டியின் எடை 4 கி.கி இருக்கும். ஒரு நாளைக்கு 2-2.5 கி.கி பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன்பெற்றது. ஆண்டொன்றிற்கு 274 நாட்களில் 280 கி.கி பால் உற்பத்தி செய்யும். பாலில் கொழுப்புச் சத்து 3 முதல் 3.5 சதவிகிதம் இருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "செம்மறியாட்டினங்கள்". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுனாபாரி_ஆடு&oldid=3930385" இலிருந்து மீள்விக்கப்பட்டது