உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெர்சி மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெர்சி மாடு என்பது ஒரு கறவை மாடு ஆகும் இது மிகவும் பழமையான குட்டை மாட்டு இனம் ஆகும். இந்த மாடுகள் கால்வாய் தீவுகளின், ஜெர்சி தீவில் தோன்றியவை, இவை ஆறு நூற்றாண்டுகளுக்குக் கலப்பு இல்லாமல் வளர்ந்துவந்தவை. இந்த இன மாடுகள் இதன் பால் உள்ள உயர் கொழுப்புத் தன்ம மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த உடல் எடை, அத்துடன் அதை வளர்பவரிடம் அன்பார்ந்த மனநிலை கொண்டிருபது ஆகியவற்றால் மிகவும் பிரபலமானதாகும்.

ஜெர்சி மாடு மிகவும் சிறியதாக 400-500 கிலோகிராம் (880-1,100 பவுண்டு) வரையிலான எடை கொண்டவை. இவற்றால் கிடைக்கும் பால் உற்பத்தி பொருளாதார நலன்கள் இந்த இனத்தின் புகழுக்கு முதன்மை காரணியாக உள்ளது. இதனால் இந்தியாவில் நாட்டு மாடுகளுடன் பெருமளவில் இந்த ஜெர்சி மாடுகள் கலப்பினம் செய்யப்பட்டு, இந்த ஜெர்சி கலப்பின மாடுகளே தற்போது பரவலாக உள்ளன.[1]

விளக்கம்

[தொகு]

இந்த மாடுகள் மிகவும் லேசான சாம்பல் நிறம்-எலி நிறம் முதல் செம்பட்டை நிறம் அல்லது கறுப்பு நிறத்திலும்கூட இருக்கும். இதன் உடல் பகுதிகளைவிட இடுப்பு, தலை, தோள் பகுதிகள் மிகவும் அடர்த்தியான நிறத்தில் இருக்கும். பிறந்த 26-30 மாதங்களில் கன்று ஈனத் தொடங்கும். மீண்டும் 13-14 மாத இடைவெளியில் மீண்டும் கருத்தரிக்கும். கலப்புக்கு உள்ளாகாத ஜெர்சி பசுக்கள் ஒரு நாளைக்கு 20 லிட்டர்வரை பால் தரும். கலப்பின ஜெர்சிகள் ஒரு நாளைக்கு 8-10 லிட்டர்வரை பால் தரும். இது தரும் பாலில் 5.3 சதவீதக் கொழுப்பு 15% இதர திட சத்துக்களும் உடையது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஜெர்சி". அறிமுகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2017.
  2. "எதெல்லாம் அயல் மாடு?". கட்டுரை. தி இந்து. 28 சனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்சி_மாடு&oldid=3578354" இலிருந்து மீள்விக்கப்பட்டது