மாலா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலா ராய்
Mala Roy
2021-ல் மாலா ராய்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்சுபத்ரா பக்சி
தொகுதிகொல்கத்தா தெற்கு
தலைவர், கொல்கத்தா மாநகராட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மே 2015
பிர்கத் அக்கீம்
துணைத் தலைவர்அதின் கோசு
தொகுதிபகுதி எண் 88, கொல்கத்தா மாநகராட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 நவம்பர் 1957 (1957-11-19) (அகவை 66)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (1998–2005, 2015–தற்போது)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1995–1998, 2010–2015)
தேசியவாத காங்கிரசு கட்சி (2005–2010)
துணைவர்நிர்பெத் ராய்
பிள்ளைகள்2
வாழிடம்கொல்கத்தா
மூலம்: [1]

மாலா ராய் (Mala Roy)(பிறப்பு 19 நவம்பர் 1957) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 முதல் கொல்கத்தா தெற்கு மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2015 முதல் கொல்கத்தா மாநகராட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

வாழ்க்கை[தொகு]

மாலா ராய் 1976-ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[1] இவர் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் துணைத் தலைவருமான நிர்பேத் ரேயை மணந்தார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1995-ல், ராய் கொல்கத்தா மாநகராட்சி பகுதி எண்.88லிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 576 வாக்குகள் வித்தியாசத்தில் தனது அடுத்தபடியாக வந்த போட்டியாளரைத் தோற்கடித்தார். 2000ஆம் ஆண்டில், இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சுதேசரஞ்சன் தாசை 3,205 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2005ல் தேசியவாத காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு திரிணாமுல் கட்சியின் ககோலி கோஷ் தஸ்திதாரை 1,900 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] 2010-ல், இவர் மீண்டும் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாலா ராய் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கொல்கத்தா தெற்குத் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார். இவரால் 113,453 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.[4] பின்னர், மார்ச் 7, 2015 அன்று, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த மாலா ராய், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.[5] மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இவர் மாநகராட்சியின் தலைவரானார். இந்த மாநகராட்சியின் முதல் பெண் தலைவர் இவர் என்ற பெருமையினைப் பெற்றார்.[6][7] இவர் பகுதி உறுப்பினராக இருந்தபோது, தன்னுடைய 88வது பகுதியினை நகரின் பசுமையான பகுதியாக மாற்றினார்.[8]

12 மார்ச் 2019 அன்று, கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ராய் கொல்கத்தா தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரதா பக்ஷி கட்சியின் அமைப்பை வலுப்படுத்த ஆர்வமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.[9] மே 23 அன்று, மாலா தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் சந்திர குமார் போசை 155,192 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mala Roy". MyNeta. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  2. "মালার পর তৃণমূলে পা বাড়িয়ে নির্বেদ, শঙ্করও" [After Mala, Nirbed and Shankar are on the verge of joining Trinamool]. Ei Samay. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  3. "Winners' duel and a dark horse". 28 May 2010. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  4. "Kolkata Dakshin". Elections in India. Archived from the original on 29 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  5. "West Bengal: Congress leader Mala Roy joins Trinamool Congress". இந்தியா டுடே. 7 March 2015. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  6. "Mala Roy to be KMC chairperson". The Statesman. 7 May 2015. Archived from the original on 4 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Congress defector Mala Roy named KMC chairperson". இந்தியன் எக்சுபிரசு. 6 May 2015. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  8. "Mala Roy reaches out to each household, takes green route to win voter's confidence". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  9. "মমতার কেন্দ্রে সুব্রতর 'না', গতবারের কংগ্রেস প্রার্থী মালা রায়ের উপর আস্থা তৃণমূলের" [In Mamata's constituency Subrata says 'no', Trinamool puts faith on former Congress candidate Mala Roy]. One India. 12 March 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  10. "২ লাখেরও বেশি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়" [Trinamool Congress candidate Mala Roy wins by a margin of more than 2 lakh votes.] (in Bengali). Aajkaal. 23 May 2019. Archived from the original on 29 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலா_ராய்&oldid=3743452" இலிருந்து மீள்விக்கப்பட்டது