மாருதி 800

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாருதி 800
Maruti 800 AC.jpg
உற்பத்தியாளர்மாருதி சுசூக்கி
வேறு பெயர்சுசூகி மெஹ்ரான் (PAK)
சுசூகி மாருதி (EUR)
சுசூகி நன்டிக் (MT)
உற்பத்தி1983–18 சனவரி 2011
2.7 மில்லியன் மகிழுந்துகள் உருவாக்கி விற்பனைக்கு விடப்பட்டன
பொருத்துதல்இந்தியா, அரியானா, குர்கான்
மாருதி ஆல்டோ 800
வகுப்புசிறியரக மகிழுந்து
உடல் வடிவம்ஐந்து கதவுகள்
திட்ட அமைப்புமுன்பக்க எஞ்சின், முன்-சக்கர-இயக்கி
இயந்திரம்796 cc (0.8 L) F8B MPFI I3 (India)[1]
796 cc (0.8 L) F8B carb. I3 (Pakistan)[2]
செலுத்தும் சாதனம்4-speed manual
5-speed manual
சில்லு அடிப்பாகம்2,175 mm (85.6 in)
நீளம்3,335 mm (131.3 in)
அகலம்1,440 mm (56.7 in)
RelatedSuzuki Fronte

மாருதி 800 (Maruti 800) என்பது மாருதி சுசூக்கி நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறியரக காராகும். துவக்கத்தில் இதன் விலை 53000 ஆகும். இந்த மாதிரி வண்டிகள் 1983 முதல் 2014 சனவரி 18 வரை தயாரிக்கப்பட்டன.[3] முதல் தலைமுறை (SS80) 1979 சுசூகி ஃப்ரான்ட்டியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 800 cc F8B எஞ்சினைக் கொண்டு இருந்தது. இது இந்தியாவில் மிகவும் செல்வாக்கு செலுத்திய வாகனமாக பரவலாக இருந்தது. தயாரிக்கப்பட்ட 2.87 மில்லியன் 800 மகிழுந்துகளில், 2.66 மில்லியன் மகிழுந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன.[4]

30 ஆண்டுகளுக்கு மேலாக, மாருதி 800 இந்தியாவில் இரண்டாவது மிக அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட மகிழுந்தாக , இந்துஸ்தான் அம்பாசிடருக்கு அடுத்ததாக இருந்தது. இந்தியாவில் தாராளமயமாக்கலுக்கு முன்பாகவே ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்துடன் இந்திய ஒன்றிய அரசு கூட்டு சேர்ந்து உருவாக்கிய மாருதி நிறுவனத்தால் இந்த மகிழுந்து உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 30 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுடன் இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நடுத்தர மக்களும் மகிழுந்தை வாங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது இது.வின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் 1984 முதல் 2002 வரை தயாரிக்கப்பட்ட ஒரு மகிழுந்து ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maruti 800 :: Maruti 800". 2009-10-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. "PakWheels.com :: Suzuki Mehran 2005". 2006-03-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-24 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Maruti Suzuki stops production of iconic 800". livemint.com. 2014-02-07. 2014-02-07 அன்று பார்க்கப்பட்டது.
  4. "End of the road for India's beloved Maruti 800". HT. 2014-02-08. 2014-12-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  5. "பிரபலமான கார்கள்". கட்டுரை. தி இந்து. 21 ஆகத்து 2017. 21 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாருதி_800&oldid=3578034" இருந்து மீள்விக்கப்பட்டது