மாமன் மகள் (1955 திரைப்படம்)
| மாமன் மகள் | |
|---|---|
| இயக்கம் | ஆர். எஸ். மணி |
| தயாரிப்பு | ஆர். எஸ். மணி மணி புரொடக்சன்சு |
| இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் சந்திரபாபு டி. எஸ். பாலையா டி. எஸ். துரைராஜ் சாவித்திரி சி. கே. சரஸ்வதி எஸ். ஆர். ஜானகி |
| வெளியீடு | அக்டோபர் 14, 1955 |
| நீளம் | 16873 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாமன் மகள் என்பது 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைக் காதல் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். எஸ். மணி எழுதி, இயக்கி, தயாரித்தார். அப்போது பிரபலமாகாத ஸ்ரீதர் உரையாடலை எழுதினார். இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, சந்திரபாபு, டி. எஸ். பாலையா ஆகியோர் நடித்திருந்தனர்.[1] 1955 அக்டோபர் 14 அன்று வெளியான இப்படம் மிதமான வெற்றியைப் பெற்றது.
கதை
[தொகு]பணக்காரரான தர்மலிங்கத்துக்கு மாலதி என்ற ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளாள். தர்மலிங்கத்தின் மனைவி காணாமல் போன தன் தம்பி மகனைக் கண்டுபிடித்து அவனுக்கே தன் மகள் மாலதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். மேலும் தன் தம்பி மகன்தான் சொத்துக்களுக்கு வாரிசு என்றும் உயில் எழுதி வைத்துவிடுகிறார். தர்மலிங்கம் தன் நண்பன் கன்னியப்பனிடம் தன் மருமகனைத் தேடும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஆனால் கன்னியப்பனோ சொத்துக்களை அபகரிக்க தன் மருமகன் தாண்டவத்தை காணாமல் போன தர்மலிங்கத்தின் மருமகனாக நடிக்க ஏற்படாடு செய்கிறார். தர்மலிங்கம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதற்கிடையில், கூச்ச சுபாவமுள்ள இளைஞனான சந்திரன், மாலதியின் ஆசிரியராகிறான். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். இதனால் பயந்துபோன கன்னியப்பன், சந்திரனை வேலையிலிருந்து நீக்குகிறார். சந்திரனின் பாட்டி காமாட்சி அவனுக்கு ஒரு மந்திர கவசத்தை வழங்குகிறார், அது அவனை உறிதியானவனாகவும் தைரியமானவனாகவும் மாற்றும் என்று நம்பிக்கையூட்டுகிறார். சந்திரன் ஒரு முதிர்ந்த தோட்டக்காரனாக மாறுவேடமிட்டு மாலதியைச் சந்திக்க வருகிறான். இந்நிலையில் அந்த உயில் திடீரென்று மறைந்துபோகிறது. பல சிக்கல்களும் உருவாகின்றன. பின்னர் உண்மை வெளிப்படுகிறது, கன்னியப்பன் செய்த நயவஞ்சகம் வெளியாகிறது. காதலர்கள் ஒன்றுபடுகிறனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- ஜெமினி கணேசன் - சந்திரன்
- சாவித்திரி (நடிகை) - மாலதி
- டி. எஸ். பாலையா - கன்னியப்பன்
- டி. பாலசுப்பிரமணியம் - தர்மலிங்கம்
- ஜே. பி. சந்திரபாபு - தாண்டவம்
- டி. எஸ். துரைராஜ் - விஞ்ஞானம்
- இலட்சுமி பிரபா - ஞானம்
- எஸ். ஆர். ஜானகி - காமாட்சி
- சி. கே. சரஸ்வதி - தாண்டவத்தின் தங்கை
- ஓ. ஏ. கே. தேவர் - வீராசாமி
தயாரிப்பு
[தொகு]மாமன் மகள் படத்துக்கு கதை எழுதி இயக்ககியவர் ஆர். எஸ். மணி ஆவார். அப்போது பிரபலமாகதவரான ஸ்ரீதர் உரையாடலை எழுதினார்.[1] ஒளிப்பதிவை நிமாய் கோஷ் மேற்கொண்டார். படத் தொகுப்புப் பணிகளை கே. கோவிந்தசாமி மேற்கொண்டார்.[2]
இசை
[தொகு]இப்படத்திற்கு எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்தார். சந்திரபாபுவின் பாத்திரம் (சாவித்திரி) ஓளிப்படத்தைப் பார்த்து காதலுடன் பாடும், "கோவா மாம்பழமே, மல்கோவா மாம்பழமே" பாடல் பிரபலமடைந்தது. அவருடன் அப்படாலில் துரைராஜும் ஆடுவார். அப்பாடலில் உள்ள ‘சாமலாக்கிடி கிரிகிரி..., சாப்புட்டுப் பாரு வடகறி...’ போன்ற வார்த்தைகள் அதன் பிரபலத்திற்கு காரணமாக இருந்தன.[1]
| பாடல்கள் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
|---|---|---|---|
| "ஏனென்று நீ சொல்லு தென்றலே" | ஜிக்கி | 04:02 | |
| "மலரும் மணமும்...அதிசயமாக ரகசியம் ஒண்ணு" | ஏ. எம். ராஜா | 02:48 | |
| "நெஞ்சிலே உரம்...தலை நிமிர்ந்து நில்லடா" | டி. எம். சௌந்தரராஜன் | சுரபி | 03:16 |
| "அதிசயமான ரகசியம்" | ஜிக்கி | 02:39 | |
| "தேவி நீயே துணை" | டி. வி. ரத்னம் | பாபநாசம் சிவன் | 03:15 |
| "கோவா மாம்பழமே, மல்கோவா மாம்பழமே" | ஜே. பி. சந்திரபாபு | 03:24 | |
| "ஆசை நிலா சென்றிடாதே" | ஜிக்கி | கம்பதாசன் | 03:10 |
வெளியீடும், வரவேற்பும்
[தொகு]மாமன் மகள் 1955 அக்டோபர் 14 அன்று வெளியாகி,[2][3] மிதமான வெற்றியைப் பெற்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Randor Guy (27 August 2009). "Blast from the Past – Maaman Magal 1950". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170302021043/http://www.thehindu.com/features/cinema/Maaman-Magal-1950/article16877296.ece.
- ↑ 2.0 2.1 "1955 – மாமன் மகள் – மணி புரொடக்சன்ஸ்" [1955 – Maaman Magal – Mani Productions]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 16 May 2018. Retrieved 16 May 2018.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ ராம்ஜி, வி. (14 October 2022). "'கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே'வுக்கு 67 வயது!". Kamadenu. Archived from the original on 14 October 2022. Retrieved 17 October 2022.