மானோடக்டிலைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானோடக்டிலைடீ
மானோடக்டிலசு ஆர்சென்டியசு (Monodactylus argenteus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: மானோடக்டிலைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

மானோடக்டிலசு ஆர்சென்டியசு மிகவும் விரும்பப்படுகின்ற காட்சியக மீனாகும்.

மானோடக்டிலைடீ (Monodactylidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை பக்கங்களில் மிகவும் ஒடுங்கித் தட்டுப் போன்ற வடிவிலான உடலமைப்புக் கொண்டவை. இவை நீண்டு அமைந்த முதுகுத் துடுப்புக்களையும், குதத் துடுப்புக்களையும் கொண்டிருக்கின்றன. இவை நடுத்தரமான அளவுள்ளவை. பொதுவாக 25 சதம மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. மானோடக்டிலசு செபீ (Monodactylus sebae) என்னும் இனத்தின் நீளம் அதன் உயரத்தைவிடக் குறைவாக இருக்கும். முதுகுத் துடுப்பின் மேல் நுனியில் இருந்து, குதத் துடுப்பின் கீழ் நுனி வரை இவற்றின் உயரம் 30 சதம மீட்டர் வரை இருக்கும். இக் குடும்ப மீனினங்களுட் பல வெள்ளி நிறத்தில் மஞ்சள், கறுப்பு நிறக் குறிகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இளம் மீன்கள் கூடிய கவர்ச்சி கொண்டவை. இவற்றுட் பல இனங்கள் மீன் காட்சியகங்களில் வளர்க்கப்படுகின்றன.


இக் குடும்பத்தில் மானோடக்டிலசு, சுயேட்டீ என்னும் இரண்டு பேரினங்களில் ஆறு இனங்கள் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, இந்தியா, பிற தெற்காசியப் பகுதிகள் தொடக்கம் மேற்கே ஆசுத்திரேலியா வரையுள்ள கரையோரங்களில் காணப்படுகின்றன. மானோடக்டிலசு பேரினத்தைச் சேர்ந்த இனங்கள் பல கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன. நன்னீரிலும் நீண்ட நேரம் இருக்கக்கூடியவை. மானோடக்டிலைட்டுக்கள் சிறிய மீன்களையும், முதுகெலும்பிலிகளையும் பிடித்து உண்கின்றன. ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகளில் வாழும் இவை பெரிய கூட்டங்களாகக் காணப்படுகின்றன.

இனங்கள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானோடக்டிலைடீ&oldid=1352662" இலிருந்து மீள்விக்கப்பட்டது