மாங்கோடிபி
Appearance
உருவாக்குனர் | MongoDB Inc. |
---|---|
தொடக்க வெளியீடு | 2009 |
அண்மை வெளியீடு | 3.0.6 / 24 ஆகத்து 2015 |
Preview வெளியீடு | 3.2.0 / 31 திசம்பர் 2015 |
மொழி | சி++ |
இயக்கு முறைமை | குறுக்கு தளம் |
கிடைக்கும் மொழி | English |
உருவாக்க நிலை | Active |
மென்பொருள் வகைமை | ஆவணம் சார்ந்த தரவுத்தளம் |
உரிமம் | GNU AGPL v3.0 (drivers: அப்பாச்சி அனுமதி) |
இணையத்தளம் | www |
மாங்கோடிபி (MongoDB) என்பது குறுக்குத்தள ஆவணஞ்சார்ந்த தரவுத்தளமாகும். இஃது ஒரு கட்டமைப்பில்லா வினவு மொழியாகும் (NoSQL). மாங்கோடி ஜேசன் (JSON) போன்ற ஆவணங்களைத் தரவுத்தள புனைவுருப்படிவத்துடன் பயன்படுத்துகின்றது. இஃது ஒரு திறமூல, கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]- 2007 இல் 10ஜென் என்ற நிறுவனத்தால் இதன் உருவாக்கம் தொடக்கமானது
- 2009 இல் இஃது அப்பாச்சி அனுமதி கொண்டு திறமூல, கட்டற்ற மென்பொருளாக மாற்றப்பட்டது
- மார்ச் 2010 இலிருந்து பயன்பாட்டிற்கு ஏற்பாடாகிவிட்டது
சிறப்பம்சங்கள்
[தொகு]- ஜாவாஸ்கிரிப்ட் மூலம் நேரடியாக தரவுத்தளத்தை தொடர்பு கொள்ள முடியும்.
- ஒரு மாங்கோடிபி ஆவணத்தில் எந்தப் புலத்தில் வேண்டுமானாலும் அட்டவணையிடப்பட பயன்படுத்த முடியும்
அமைப்பு
[தொகு]மாங்கோடிபி என்பது தொகுப்புகளைக் கொண்ட ஒரு தரவுத்தளம் ஆகும். தொகுப்புகள் ஆவணங்களைக் கொண்டுள்ளன. ஆவணங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தரவிடங்களைக் கொண்டுள்ளன. தொகுப்புக்களை அகவரிசைப்படுத்துவதன் மூலம் நாம் சிறந்த முறையில் தேடுதல், வரிசையாக்க செயல்திறனை அதிகரிக்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State of MongoDB March, 2010". DB-Engines (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on September 18, 2017. பார்க்கப்பட்ட நாள் July 5, 2017.
- ↑ "How to Set Up a MongoDB NoSQL Cluster Using Oracle Solaris Zones". Oracle. Archived from the original on August 12, 2017. பார்க்கப்பட்ட நாள் July 5, 2017.
- ↑ "How-To: MongoDB on FreeBSD 10.x". FreeBSD News. Archived from the original on December 28, 2017. பார்க்கப்பட்ட நாள் July 5, 2017.