மஸ்பேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஸ்பேட்
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடு பிலிப்பீன்சு
பிராந்தியம் பிகோல் பிராந்தியம்
நேர வலயம் பிசீநே (ஒசநே+8)

மஸ்பேட் (Masbate) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், பிகோல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மஸ்பேட் நகரம் ஆகும். இது 1917 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் 550 கிராமங்களும், 21 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அந்தோனியோ ட். க்ஹோ (Antonio T. Kho) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 4,151.78 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக மஸ்பேட் மாகாணத்தின் சனத்தொகை 892,393 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 30ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 29ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் செபுவாவோ, பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஏழு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 210 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 43ஆம் மாகாணம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. பார்த்த நாள் 30 December 2013.
  2. "Population of the provine".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஸ்பேட்&oldid=2168877" இருந்து மீள்விக்கப்பட்டது