மவுனா லோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மவுனா லோவா
Mauna Loa Volcano.jpg
மவுனா லோவா எரிமலை
உயர்ந்த இடம்
உயரம்13,679 ft (4,169 m) [1]
இடவியல் முக்கியத்துவம்7,079 ft (2,158 m)
புவியியல்
அமைவிடம்ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு
மலைத்தொடர்ஹவாய் தீவுகள்
நிலவியல்
பாறையின் வயது700,000–1 மில்லியன்
மலையின் வகைகேடய எரிமலை
கடைசி வெடிப்புமார்ச் - ஏப்ரல் 1984
Climbing
First ascentபண்டைய காலங்கள்
Easiest routeஅய்னாபோ பாதை
எரிகற்குழம்பு

மவுனா லோவா (Mauna Loa, /ˌmɔːnə ˈl.ə/; நீண்ட மலை[2]) என்பது ஐக்கிய அமெரிக்கா, அவாய் தீவில் அமைந்துள்ள ஐந்து எரிமலைகளுள் ஒன்றாகும். இதுவே உலகில் உள்ள எரிமலைகளில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. செயல்படும் கேடய எரிமலை வகையைச் சேர்ந்த இந்த எரிமலை அண்ணளவாக 75,000 கிமீ3 கனவளவைக் கொண்டது.[3] ஆனாலும், இதன் உயரம் இதன் அருகிலுள்ள மவுனா கியா எரிமலையை விட 37 மீ குறைவானதாகும். இதன் எரிமலைக் குழம்பு அதிகமான நீர்ம நிலையிலும், சிலிக்கா-குறைவானதாகவும், வெடிக்கும் தன்மை அற்றதாகவும் உள்ளது.

மவுனா லோவா எரிமலை 700,000 ஆண்டுகளாக வெடித்து வருவதாகவும், 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் இது கடல்-மட்டத்தில் தோன்றியதாகவும் கருதப்படுகிறது. இவ்வெரிமலையில் இருந்து அறியப்பட்ட பாறைகள் 200,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதல்ல.[2]

கடைசியாக இவ்வெரிமலை வெடித்தது 1984 மார்ச் 24 முதல் ஏப்ரல் 15 வரையான காலப்பகுதியிலாகும். அண்மைக்கால வெடிப்புகள் பெரும் சேதங்களை உண்டுபண்ணாத போதிலும், 1926 இலும் 1950 இலும் ஏற்பட்ட வெடிப்புகள் பல கிராமங்களை அழித்தன. ஹைலோ நகரம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கற்குழம்புகளினால் பகுதியாக உருவாக்கப்பட்டதாகும்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mauna Loa, Hawaii". Peakbagger.com. 12 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Mauna Loa: Earth's Largest Volcano". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2-02-2006. 2015-08-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21-10-2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate=, |date= (உதவி)
  3. Kaye, G.D.(2002). "Using GIS to estimate the total volume of Mauna Loa Volcano, Hawaii". {{{booktitle}}}. பரணிடப்பட்டது 2009-01-25 at the வந்தவழி இயந்திரம்
  4. "The Mauna Loa Eruption of 1984". Hawaiian Volcano Observatory—ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 26-03-1998. 2013-01-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24-01-2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate=, |date= (உதவி)
  5. "1984 Eruption: March 25 - April 15". Hawaiian Volcano Observatory—ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 17-09-2004. 2013-01-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24-01-2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate=, |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுனா_லோவா&oldid=3370912" இருந்து மீள்விக்கப்பட்டது