மல்லு பாட்டி விக்ரமார்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லு பாட்டி விக்ரமார்கா
தெலங்காணா சட்டப் பேரவையின் எதிர்கட்சித் தலைவர்
தெலங்காணா சட்டப் பேரவையின் எதிர்கட்சித் தலைவர்
பதவியில்
18 ஜனவரி 2019 – 6 ஜூன் 2019
முன்னையவர்குண்டூர் ஜனா ரெட்டி, INC
தெலங்காணா சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்,
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்கட்டா வெங்கட நரசையா
தொகுதிமத்திரா, கம்மம் மாவட்டம்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் பேரவைத் தலைவர்
பதவியில்
2011–2014
பின்னவர்மந்தாலி புத்த பிரசாத், தெலுங்கு தேசம் கட்சி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்,
பதவியில்
2009–2014
தொகுதிமத்திரா, கம்மம் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூன் 1961 (1961-06-15) (அகவை 62)
வயரா, தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நந்தினி

மல்லு பாட்டி விக்ரமார்கா (Mallu Bhatti Vikramarka) (பிறப்பு 15 ஜூன் 1961) இரண்டாவது தெலங்காணா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 2009 மற்றும் 2014 தேர்தல்களில் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2011 வரை ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைக் கொறடாவாகவும், 2011 முதல் 2014 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவர் மத்திரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

தொழில்[தொகு]

மல்லு பாட்டி விக்ரமார்கா, 2009-ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 இல் தலைமைக் கொறடா ஆனார். [2] [3] அதற்கு முன் சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 4 ஜூன் 2011 அன்று ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஜனவரி 18 அன்று, 2வது தெலங்காணா சட்டப்பேரவையின் காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் தலைவராக இராகுல் காந்தி நியமித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archive News". தி இந்து. 2010-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Bhatti Vikramarka to be Cong chief whip". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-06-05. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]