உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டூர் ஜனா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டூர் ஜனா ரெட்டி
ஜனா ரெட்டி
தெலங்காணா சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர்
பதவியில்
3 ஜூன் 2014 – 11 டிசம்பர் 2018
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்மல்லு பாட்டி விக்ரமார்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூன் 1946 (1946-06-20) (அகவை 78)
அனுமூலா கிராமம், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா. தற்போதைய அனுமூலா கிராமம், நல்கொண்டா மாவட்டம், தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
(1988 - தற்போது வரை)
பெற்றோர்
  • குண்டூர் வீர ரெட்டி (தந்தை)
வாழிடம்(s)ஐதராபாத்து, தெலங்காணா

குண்டூர் ஜனா ரெட்டி (Kunduru Jana Reddy) (பிறப்பு 20 ஜூன் 1946) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் முதல்தெலங்காணா சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2009 முதல் 2014 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் அமைச்சராக பணியாற்றினார். அபோது ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசின் மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவராக இருந்த இவர், மறைந்த முன்னாள் முதல்வர் எ. சா. ராஜசேகர் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை, சிறைகள், தீயணைப்பு சேவை, சைனிக் நலன், அச்சிடுதல் மற்றும் எழுதுபொருள் அமைச்சராக பணியாற்றினார். 2004 முதல் 2009 வரை. 2009 தேர்தலில் 6214 வாக்குகள் வித்தியாசத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சீனப்பா ரெட்டி தேராவுக்கு எதிராக வெற்றி பெற்றார். 2014 இல் நோமுலா நர்சிமையாவை விட 16558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1994 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் குண்டேபோயினாமே ராமமூர்த்தி யாதவிடம் தோல்வியடைந்தார்.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டூர்_ஜனா_ரெட்டி&oldid=3926395" இலிருந்து மீள்விக்கப்பட்டது