மல்லு சுயராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லு சுயராச்சியம்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1978–1985
முன்னையவர்குருகந்து வெங்கட நரசையா
பின்னவர்இராம்ரெட்டி தாமோதர் ரெட்டி
தொகுதிதுங்கதூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1931 (1931)
கார்விராலா கொத்தகுடேம், தக்காணப் பீடபூமி
இறப்பு19 மார்ச்சு 2022(2022-03-19) (அகவை 90–91)
ஐதராபாத்து, தெலங்காணா, India
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்மல்லு வெங்கட நரசிம்ம ரெட்டி
பிள்ளைகள்3
வாழிடம்(s)நல்கொண்டா, தெலங்காணா, India

மல்லு சுயராச்சியம் (Mallu Swarajyam) (1931 - 19 மார்ச் 2022) இந்தியப் பொதுவுடமைக் கட்சியைச் (மார்க்சிஸ்ட்) சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வதியும், விடுதலை இயக்க வீரரும் ஆவார். இவர் தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டக் காலத்தில் 'தளம்' என்ற ஆயுதக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.[1] இவரது சுயசரிதை நா மாட்ட துப்பாக்கி தோட்டா (என் வார்த்தை ஒரு துப்பாக்கி தோட்டா) என்ற பெயரில் ஐதராபாத் புக் டிரஸ்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மல்லு சுயராச்சியம், கார்விராலா கொத்தகுடேமில் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பீம்ரெட்டி ராமிரெட்டி மற்றும் சொக்கம்மாள் ஆகியோருக்கு 1931 இல் பிறந்தார்.[3]

தொழில்[தொகு]

நல்கொண்டா மாவட்டம் ஐதராபாத் நிசாமின் கீழ் ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுயராச்சியத்தை அடைவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி விடுத்த அழைப்பின் பேரில் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட இவரது உறவினர்கள் பலரின் விருப்பத்திற்கேற்ப இவருக்கு சுயராச்சியம் என்று பெயர் வைத்தனர்.[4]

தனது 10வது வயதில், நிசாமின் இரசாக்கர்களுக்கு எதிராக மக்களை திரட்டத் தொடங்கினார். கொத்தடிமைத் தொழிலை நிறுத்த வேண்டும் என்ற ஆந்திர மகாசபையின் அழைப்பை ஏற்று, குடும்ப பாரம்பரியத்தை மீறி, பல சாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு அரிசி வழங்கியபோது, இவரது 11வது வயதில் இவரது பொது வாழ்க்கை தொடங்கியது.[4] மல்லு சுயராச்சியம் ஜமீந்தார்களுக்கு எதிராக போராடும் தளம் என்றக் குழுவின் தலைவராக இருந்தார். அந்த நேரத்தில் இவரது தலைக்கு ரூ .10,000 பரிசாக அறிவிக்கப்பட்டது.[3]

நிசாமின் கொடுமையான ஆட்சிக்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கும் எதிராக ஆந்திர மகாசபையின் பதாகையின் கீழ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஆயுதம் ஏந்திப் போராடியது.

2008 இல் இறந்த இவரது கணவர், மல்லு வெங்கட நரசிம்ம ரெட்டி மற்றும் அவரது சகோதரர் பீம்ரெட்டி நரசிம்ம ரெட்டி (இருவரும் மாநிலத்தில் பொதுவுடைமை இயக்க உறுப்பினர்கள்) இவரது வாழ்க்கையில் ஆழமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஆயுதப் போராட்டத்தின் நோக்கத்தை கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவிப்பதற்கான வழிமுறையாக இருந்து ஜமீந்தார்களிடமிருந்து நிலத்தைப் பெற்று ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் விரிவுபடுத்தியது.

பின்னர் இவர் உள்ளூர் விவசாயிகளின் நலனில் தீவிரமாக பங்கேற்றார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தார். இவர் 1978 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் துங்கத்தூர்த்தி சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு[தொகு]

மல்லு சுயராச்சியத்திற்கு மல்லு கவுதம் ரெட்டி மற்றும் மல்லு நாகார்ஜுன் ரெட்டி என இரு மகன்கள் இருந்தனர். சிரஞ்சீவியின் பிரசா ராச்யம் கட்சியில் 2009 தேர்தலில் நல்கொண்டா தொகுதியில் போட்டியிட்ட கருணா என்ற மகளும் இவருக்கு இருந்தார்.[6] இவரது மருமகள், மல்லு லட்சுமி இவரைப் பின்பற்றினார். மேலும் அவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். மேலும் 2019 தேர்தலில் நல்கொண்டாவில் இருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிட்டார்.

இறப்பு[தொகு]

மல்லு சுயராச்சியம் தனது 91வது வயதில் 19 மார்ச் 2022 அன்று ஐதராபாத்தில் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக இறந்தார்.[3] இவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக நல்கொண்டா அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லு_சுயராச்சியம்&oldid=3826843" இலிருந்து மீள்விக்கப்பட்டது