உள்ளடக்கத்துக்குச் செல்

பீம்ரெட்டி நரசிம்ம ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோழர் பீம்ரெட்டி நரசிம்ம ரெட்டி (Bhimreddy Narasimha Reddy) ஓர் சுதந்திர போராட்ட வீரரும், தெலுங்கானா கிளர்ச்சியின் தலைவராக இருந்தார். இரசாக்கர்களுக்கு எதிரான கிளர்ச்சியை வழிநடத்திய இவர், ஆந்திராவின் சே குவேரா என்று அழைக்கப்பட்டார். இவர் இன்றைய தெலுங்காணாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ரெட்டி, ஐதராபாத் நிசாம் ஆட்சியின் போது இரசாக்கர்களுடன் ஆறு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து போராடினார். வாரங்கல் மாவட்டத்திலுள்ள மகபூபாபாத் அருகே இரசக்கர்களால் இவருக்கு எதிராகவும், இவரது மனைவி மற்றும் குழந்தைக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்பட்டது. நரசிம்ம ரெட்டி துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்த போது தப்பினார். நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிரான பல போராட்டங்களையும் வழி நடத்தினார்.

தொழில்

[தொகு]

தெலங்காணா கிளர்ச்சி என்கிற விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சியால் ஆந்திர மகாசபையின் பதாகையின் கீழ் கிளர்ச்சி நடத்தப்பட்டது. இவர் மூன்று முறை மிரியாலகுடாவிலிருந்து மக்களவைக்கும், இரண்டு முறை நல்கொண்டா மாவட்டத்திலுள்ள சூர்யபேட்டை மற்றும் துங்கதுர்த்தியிலிருந்து சட்டப் பேரவைக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இவர் 1998 இல் கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர், தனது சொந்த மார்க்சிஸ்ட் அமைப்பைத் தொடங்கினார். அது பின்னர் மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியுடன் இணைக்கப்பட்டது.

இறப்பு

[தொகு]

பீம்ரெட்டி நரசிம்ம ரெட்டி , மே 9, 2008 அன்று இறந்தார் [1]

மேற்கோள்கள்

[தொகு]