மல்லதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லதேவன் (Malladeva) கர்னாட் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் நான்யதேவாவின் மகனும் மிதிலையின் இளவரசனும் ஆவார். சில அறிஞர்களின் கூற்றுப்படி, மல்லதேவன் "மிதிலையின் மறக்கப்பட்ட ராஜா" என்று குறிப்பிடப்படுகிறார். ஏனெனில் பெரும்பாலான பதிவுகள் மற்றும் மரபுகள் இவரது சகோதரர் கங்கதேவன் தனது தந்தைக்குப் பிறகு வம்சத்தின் ஆட்சியாளராக வந்ததாகக் குறிப்பிடுகின்றன.[1] ஆயினும்கூட, மல்லதேவன் தனது சொந்த கோட்டையை நவீனகால பீகாரில் உள்ள தர்பங்காவில் உள்ள பீட்-பகவான்பூர் கிராமத்தில் நிறுவியதாகத் தெரிகிறது. கிராமத்தில், "ஓம் சிறீ மல்லதேவஸ்யா" என்று எழுதப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பல கர்னாட் கால சிற்பங்கள் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[2][3]

கவிஞரான வித்யாபதியின் படைப்பிலும் மல்லதேவன் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கன்னோஜ் மன்னர் ஜெயச்சந்திரனின் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு "வீரன்" என்று வர்ணித்தார். இவர் தனது சகோதரர் கங்கதேவனுடன் நல்ல உறவில் இல்லை என்று உள்ளூர் பாரம்பரியம் உறுதிப்படுத்துகிறது. பூர்ணியா மாவட்டத்தில் உள்ள மால்திகா மற்றும் சுபௌல் மாவட்டத்தில் உள்ள மல்காட் கிராமங்கள் மல்லதேவனால் நிறுவப்பட்டவை என்றும் நாட்டுப்புற பாரம்பரியம் கூருகிறது.[4] பீட்-பகவான்பூர் கிராமம் இன்று கந்தவாரிய ராஜபுத்திரர்களின் முக்கிய குடும்பத்தின் தாயகமாக உள்ளது. அவர்கள் மல்லதேவனின் வழித்தோன்றல் என்று சிலர் கருதுகின்றனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. CPN Sinha (1974). "A Critical Evaluation of sources for identification of Gangeyadeva of Tirabhukti". Proceedings of the Indian History Congress 35: 39–42. 
  2. Mishra, V. (1979). Cultural Heritage of Mithila. Allahabad: Mithila Prakasana. பக். 13. https://books.google.com/books?id=8FBuAAAAMAAJ&q=area+of+mithila. 
  3. Radha Krishna Choudhary (1954). "The Karṇāts of Mithilā, (C. 1097-1355 A. D.)". Annals of the Bhandarkar Oriental Research Institute 35 (1/4): 91–121. 
  4. Sinha, Bindeshwari Prasad (1974). Comprehensive History of Bihar, Vol 1, Part 2. Kashi Prasad Jayaswal Research Institute. பக். 317. https://archive.org/details/in.ernet.dli.2015.534083/page/n339/mode/2up?q=maldiha. பார்த்த நாள்: 7 September 2020. 
  5. P. Pathak (1983). "Origin of the Gandhavaria Rajputs of Mithila". The Journal of the Bihar Puravid Parisad Vii And Viii: 406–420. https://archive.org/details/in.ernet.dli.2015.283324/page/n567. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லதேவன்&oldid=3825468" இலிருந்து மீள்விக்கப்பட்டது